துவரை, நிணம், குடர், உதிரம் முதலியன நிறைந்த தாழியைக் கொற்றவையின் பொருட்டு முன் எடுத்துச் செல்லப் பின்னர்த் தன் சேனையோடு புறப்பட்டு மாற்றான் தேசத்தின்மீது படையெடுப்பான். அப்போது வீர முரசம் அதிரும்; யானைகள் வீறிடும்; சேனைகள் ஆரவாரஞ் செய்யும். அரசன் தன் சேனைகட்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுப்பான். மேலும் தன்படை முழுவதுக்கும் ஒருவனைத் தலைவனாக்கித் தன் படைவீரர் யாவரும் அவன் சொற்படியே கேட்டு நடக்குமாறு பணிப்பான். போர்முடிவில், போரில் சிறந்து விளங்கிய வீரர்க்கு ஏனாதி, காவிதி முதலிய சிறப்புப் பட்டங்களைச் சூட்டலு முண்டு அரசன் தன் படைவீரரோடு அமர்ந்து உண்டு களித்தலும் வழக்கமாயிருந்தது. அன்னியநாட்டு அரசன் திறைகொடுக்கச் சம்மதிப்பானாயின், அத் திறையை வாங்கிக்கொண்டு மீண்டு விடுதலு முண்டு. அன்றேல், தாபதப் பள்ளிகள் அந்தணர் இல்லங்கள் கோவில்கள் நீங்கலாகப் பகைவர் நாட்டூர்களைச் சுட்டெரித் தழித்தலு முண்டு. தமக்குப் புறங்காட்டி ஓடுவோரைப் போர்வீரர் வெட்டாமல் விடுவர். போரில் புண்பட்ட வீரரை அரசனும் உடன்வீரரும் புகழ்ந்து கொண்டாடுவர். முடிவில் அரசன் தன் வீரருட் சிறந்தாருக்கு முத்தாரம் முதலியன கொடுப்பான். சிலருக்குப் பரம்பரை வாழ்க்கையாக மருதநில ஊர்கள் கொடுப்பது முண்டு. | அக்காலத்தில் நன்றாய் அரண் செய்யப்பட்ட கோட்டைகளுமிருந்தன. பகையரசர் இக் கோட்டைகளை எதிர்த்துப் பொருதலு முண்டு. கோட்டைகள், மலை, காடு, நீர் முதலியன இல்லாத உள்நாட்டில் கல், செங்கல் முதலிய வற்றாலமைக்கப்பட்ட மதிலால் வைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வெளியே வெகுதூரம் வரை காவற்காடு பரந்திருக்கும். இக் காவற்காடானது வஞ்சனை பல வாய்த்துத் தோட்டி முள் முதலியவற்றால் பதிக்கப்பட்டது. இக் காவற்காட்டை யகன்று சென்றால் மதிலை யடுத்து அகன்று ஆழ்ந்த அகழ் உண்டு. இதில் கராங்களும் | | |
|
|