சுறாக்களும் மிகுந்திருக்கும். இதை யடுத்து அமைக்கப்பட்டதே புறமதில். புறமதிலின் மேற்புறம் பல பொறிகள், பதணம், மெய்ப்புழை ஞாயில் முதலியன வமைந்து எழுவும் சீப்புமுடைய வாயிற் கோபுர முடைத்து. கோட்டைமதிலில் வேறு பல இயந்திரங்களும் உண்டு. இதற்கு உட்புறத்துள்ளதே உள்மதில். சில கோட்டைகள் மலைஅரண், நில அரண் முதலியன சுழ்ந்திருந்தன. மேலிருந்து அம்பு எய்யும் பதுக்கிடங்கள் மதிலகத்தே அமைந்திருக்கும். | இவ்வாறு காவல் செய்யப்பட்ட கோட்டையைப் பிடிப்பதற்கு எதிர் அரசன் சேனைகளோடு வருவான். சேனைகளுக்கு முன் அரசனின் கொடி செல்லும். போர் தொடங்கும்போது யானைப்படை முன்னும், தேர் குதிரைப்படைகள் அவற்றின் பின்னும், காலாட்படை கடையிலுமாகச் செல்லும். காலாட்கள் மாட்டுத்தோலாற் செய்யப்பட்ட கேடயத்தை இடக்கரத்திலும் ஈட்டி அல்லது கண்டகோடாலியை வலக்கரத்திலும் தாங்கியிருப்பர். வில்லாளர் இடக்கையில் வில்லையும் முதுகில் அம்பறாத் தூணியையும் வைத்திருப்பர். ஈட்டிப்போர் விற்போர் செய்வோர்கள் ஒருமார் நீளமுள்ளதும் அகன்றதும் அலகுள்ளதுமாகிய வாள் தாங்கி நிற்பர்; குதிரைமறவர் காலாட்களிலும் பார்க்க, லேசான ஆயுதங்களையும் குறுகிய பரிசைகளையுங் கொண்டுசெல்வர். யானைகள் எப்பொழுதும் படையின் பெரும் பகுதியாயிருந்தது. இவ்வகையான மாற்றரசனின் படை கோட்டையை யணுகா முன்னரே கோட்டைமேலிருக்கும் கோட்டைக் காவலர் அம்பு மாரி பொழிவர். அவ்வம்புமாரியைக் கிடுகுப் படையாரும், கேடகப் படையாரும் தடுத்தும், தாங்கியும் எதிர்நோக்கிச் சென்று கோட்டையைக் கிட்டுவர். மதில் சூழ்ந்த கிடங்கின் இரு கரையிலும் நின்று பெரும்போர் புரிவார். பெரும் பலகைகளை நீரில் மிதக்கவிட்டு அவற்றின் மீது ஏணிகளைச் சார்த்திக் கோட்டைமீதேறிப் பொருதலுமுண்டு. கோட்டைக் காவலர் கோட்டையின் புறம் | | |
|
|