பக்கம் எண் :

மொழி103

போந்து போர்செய்தலு முண்டு. புறமதிலைக் கைப்பற்றிய பகையரசன் உள் மதிலையும் வளைத்து அவ்வாறே பொருது காவலாளரைக் கோட்டைக்குள் துரத்துவான். உள் மதிலும் பகையரசன் கைப்படவே, போர் ஊரின்கண் நிகழும். அப்பொழுது ஊரிலுள்ள கோயிற் புரிசைகளிலும், மதில்களிலும் வீடுகள் மீதும் ஏறி நின்று போர் செய்வார். எதிர்த்து வந்த அரசன் வெற்றி பெறுவனேல் தோற்ற வேந்தன் பெயரால் தான் முடிசூடி மங்கல நீராடித் தன் வாளுக்கும் நீராட்டுச் சடங்கு செய்து, பரந்து நின்ற தன் படையாரை யெல்லாம் ஒருங்கு கூட்டி, அவரவர்க்குத் தக்க சிறப்புச் செய்தலு முண்டு பகைவன் கோட்டையை முழுவதும் அழித்துக் கழுதை ஏரிட்டுழுது, உண்ணாவரகும் வேலும் விதைத்துத் திரும்புவதும், திறைவாங்கித் திரும்புவதும், அன்றேல் தன் ஆணையை அவ்விடத்தும் நிலைநிறுத்துமாறு சில மாதந் தங்கி நாட்டைப் பண்படுத்திச் சீர் செய்துவிட்டுத் திரும்புவதும் வழக்கமா யிருந்தன.
     தமிழ் அரசர்கள் தோற்றவர்களிடம் இரக்கமில்லாதிருந்தனர். தோற்ற அரசனுக்குரிய செழிப்புள்ள வயல்களும் சோலைகளும் பாழ்நிலங்களாக்கப்பட்டன. அழகிய அரண்மனைகள் ஆந்தையும் பேயும் வாழிடங்களாக மாற்றப்பட்டன. அவற்றின் பெரிய தூண்கள் மதயானைகள் கட்டும் தறிகளாயின. விசாலித்த மடைப்பள்ளிகள், ஆந்தை மேலே இருந்தலறத் திருடர் கொள்ளைகொண்ட பொருளைப் பங்கிடும் இடங்களாயின. நாட்டிலுள்ளார் நாலாபக்கங்களிலும் ஓடிப் பிழைத்தனர். அழகிய ஓவியந் தீட்டப்பட்ட சுவர்களையுடைய அரண்மனைகள் தரைமட்ட மாக்கப்பட்டன.
     மதிலகத்தன்றிச் சமவெளி யொன்றில் இடங்குறித்து அங்கே இருபெரு வேந்தர் சேனையும் எதிரூன்றி நின்று போர் செய்யும் வழக்கமு மிருந்தது. தானை, யானை, குதிரை, தேர் முதலிய நால்வகைப் படையும் அணி வகுத்து நின்றுசண்டை செய்யும். அரசனும் சேனையுடன் சென்று உடன் நின்றே போர் செய்வது வழக்கமா யிருந்தது. இப்