பக்கம் எண் :

மொழி105

8. வீரக்கல்

     போரில் எவரானும் மதிக்கப்படும் வீரனாய் விளங்கி உயிர்விட்டவனை எக்காலமும் ஞாபகப்படுத்துமாறு அக்காலத்தவர் செய்திருந்த ஏற்பாடுகளும் உள்ளன. வீரர் அக்காலத்து அதிகமாய் மதிக்கப்பட்டு வந்தனர். வீரச் செயல்களில் விளங்கிய வீரரை எக்காலமும் ஞாபகப்படுத்தும் சாதனைகளை ஏற்படுத்துவதும் வழக்கமாயிருந்தது. இறந்த வீரனை நினைவுகூர்தற்காகக் கற்றூணை நிறுத்தி அதில் அவ்வீரனின் பெயரையும் அவன் செய்த வீரச் செயல்களையும் வெட்டி அக் கல்லுக்கு நீராட்டி, எண்ணெயைப் பூசி, அதில் அம்மறவனையே தெய்வமாக நாட்டிச் சிறப்புச் செய்து அவனைத் தெய்வமாக வணங்கியதோடும் அமையாமல் அக் கல்லுக்குக் கோயிலமைத்து மதில், வாயில் முதலியன கட்டி ஆலயங்களாக்கி அவ்வீரனைப் போற்றியும் வந்தனர்.
ழுஎன்னைமுன் நில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்ழு

-குறள்

     இரண்டாயிர மாண்டுகட்கு முன்னரே தம் வீரரை ஞாபகப்படுத்துமாறு இங்ஙனம் கல்நட்டுப் பேர் பொறித்து வைத்த நம் முன்னோர் தன்மை எக்காலத்தும் வியக்கத்தக்கதாகவே யிருக்கின்றது.

9. இயற்றமிழ்

     ழுதமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முத்திறத்தினதாய் தொன்றுதொட்டு வழங்குகின்றது.ழு இயற்றமிழென்பது தமிழர் யாவர்மாட்டும் பொதுமையின் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கினும் இயங்குகின்ற வசனமுஞ் செய்யுளுமாகிய நூல்களின் தொகுதியாம். இதனுள் இலக்கணங்களும் இலக்கியங்களும் அடங்கும். சங்கச் செய்யுள்களும், உரைகளும், புராணம் முதலிய ஏனைய நூல்களும் இயற்றமிழேயாம். இயற்றமிழ் ஏனை இசைத்தமிழ் நாடகத்தமிழ் ஆகிய இரண்