"வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளியலும் பற்றி யெழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச் செய்யுளின் இன்றியமையாத இசை இசையிலக்கணமெனப் பெயரெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப்பட்ட தெனப்படும்; இவ்விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்கணமாகிய நாடகத் தமிழ் அவற்றுட் பின்னர்த்தாமென முறைமை கூறுதலும்." |