பக்கம் எண் :

மொழி107

தமிழ் நூல்களாகிய பரதம், அகத்தியம் முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னர் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும். இறக்கவரும் பெருங்கல முதலிய பிறவுமாம். இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிருசாணும், இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும்பெற்று, ஆயிரங்கோல் தொடுத் தியல்வது; என்னை........"தலமுதலூழியுற் றானவர் தருக்கப், புலமகளாளர் புரிநாரப்பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச், செலவு முறையெல்லாஞ் செய்கையிற் றெரிந்து, மற்றை யாழுங் கற்று முறை பிழையாண்" எனக் கதையினுள்ளுங் கூறினாராகலாற் பேரியாழ் முதலியனவும் இறந்தனவெனக் கொள்க. "இனித் தேவ விருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் அருந்தவமுனி, இடைச் சங்கத்து அநாகுல னென்னும் தெய்வ பாண்டியன், தேரோடு விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சார குமரனென, அப்பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பாரசமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியமும், இந்திர காளியமும், அறிவனார் செய்த பஞ்ச மரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயமும், கடைச்சங்க பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புறக்கூத்தியன்ற மதிவாணனார் நாடகத் தமிழுமென இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும் ஒருபுடை யொப்புமைகொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரையெனக் கொள்க" என்னும் அடியார்க்குநல்லார் உரையால் முற்காலத்து விளங்கிய இசை நாடக நூல்கள் சிலவற்றை அறிகின்றோம்.