தமிழுக்குரிய ஏழிசைகளின் பெயர் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. இவ்விசைகளின் ஓசைக் குவமை, வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு. இவற்றின் எழுத்தாவன: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள. இசைகளின் சுவைக்குவமை தேன், தயிர், நெய், ஏலம், வாழைக்கனி, மாதுளங்கனி. | "பாலை குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பண்களையாவது, அந்தாளி, மருள், குச்சரி, குறண்டி, சாதாரி முதலிய திறன்களையாவது இன்னதென்று பாடுவோர் இக்காலத்து எத்துணையர் உளர்? பண் என்பது பண்பண்ணியமென இரண்டாகவும், திறன் என்பது திறன், திறத்திறன் என இரண்டாகவும், பகுக்கப்பட்டிருந்தன. அவையெல்லாம் இப்பொழுது ராகம் என்னும் பெயரைப்பெற்றுள்ளன. செம்பாலை பண்ணென்று முன்னோர் கூறியது இக்காலத்துச் சங்கராபரணப் பெயரோடு வழங்குகின்றது. சாதாரி என்று அக்காலத்திற் சொல்லப்பட்டது நீலாம்புரி என்று வழங்குகின்றது. இவ்வாறு பழைய பண்ணுந் திறனுந் தம் பெயரை யிழந்து ஏழிசையின் பெயர்களாகிய குரல், துத்தம். கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றிருந்தன மாறிச் சட்சம் முதல் நிடாதம் வரையிலுள்ள சமக்கிருத பெயர்களைப் பெற்று ச, ரி, க, ம, ப, த, நி என்று வழங்குகின்றன." -தமிழ் வரலாறு, | "குறவஞ்சி பள்ளு சிந்து முதலிய பிற்காலப் பிரபந்தங்களும் இசையைச் சேர்ந்தனவே. இசைத்தமிழ் நூல்கள் இவ்வளவு இருந்தன வென்பதனால் அக்காலத்தில் இருந்த இசையமைப்பின் விரி வுணரப்படும். சிலப்பதிகாரம் முதலியவற்றால் இசையைப்பற்றித் தெரிந்தவைகளிற் சில கூறுவேன். | 1. இசைவகை | இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இருவகை உண்டு. பண்கள் 7 நரம்புகளுங் கொண்டன. நரம்பு என்பது இங்கே ஸ்வரம். ஏழு ஸ்வரமும் கொண்டமை | | |
|
|