சம்பூரண ராகம். அதுவே பண்ணாம். வடமொழியில் மேளகர்த்தா வென்று கூறப்படுவதும் அஃதே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று கூறப்படும். அவற்றையே, தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என வழங்குவர். யாவருக்கும் இயல்பான குரல் ஷட்ஜம் ஆகும். அதனைக் குரலென்றே வழங்கிய பெயரமைதி வியக்கற்பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் ச, ரி, க, ம, ப, த, நி, என்று இப்பொழுது பயிலப்படும் எழுத்துக்களைப் போலவே தமிழ் முறையில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு நெடிலையும் ஸ்வரங்களுக்கு எழுத்துக்களாகக் கொண்டு பயின்றனர். | இந்த ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனகராக மென்பதும் அதுவே. அப்பண்களிலிருந்து திறங்கள் பிறக்கும். அவை இப்போது ஜன்யராகங்களென்று வழங்கப்படும். `நிரைநரம்பிற்றே திறமெனப் படுமேழு என்ற திவாகரச் சூத்திரத்தால் பண்கள், திறங்கள் முதலியவற்றின் இலக்கணம் விளங்கும். பண்களுக்கு இனமாகத் திறங்கள் கூறப்படும். யாப்பிலக்கணத்திற் "பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய், வண்ண விகற்ப வகைமையால்-பண்ணின், திறம் விளரிக் கில்லதுபோற் செப்பலகவ, லிசைமருட்கு மில்லையினம்" என்று காணப்படும் இலக்கணத்தில் இது விளக்கப்பட்டிருத்தல் காண்க. | இப்படிப் பிறக்கும் பண்ணுந் திறமுமாம் இசை வகைகள் ஒருவழியிற் றொகுக்கப்பட்டு 11,991 என்று கூறப்படுகின்றன. பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனப் பெரும் பண்கள் ஐந்து. இவைகளின் வகையாகும் பண்கள் பல. இவைகளுள் பகற்பண்கள் முதலியவையும், அவ்வப்பொழுதிற் கமைந்த பண்களும் யாமங்களுக் குரியனவும், சுவைகட்குரியனவும் வணங்குதற்குரியனவுமெனப் பலவகை யுண்டு. புறநீர்மை முதலிய பன்னிரண்டு பண்கள் பகற்பண்க ளெனப்படும். தக்க | | |
|
|