பக்கம் எண் :

110தமிழகம்

ராக முதலிய ஒன்பது பண்களும் இராப்பண்க ளென்பர். செவ்வழி முதல் மூன்றும் பொதுப்பண்களாம். காலைக்குரிய பண் மருதம். மாலைக்குரியது செவ்வழி என்பாருமுளர். இந்தப் பண்களால் இசைவல்லோர்கள் சில குறிப்பினை அறிவிப்பதுண்டு. ஒருவர் தம் நண்பனை மாலையில் வரவேண்டி மாலைப் பண்ணைப் பாடினாரென்பது ஓரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
      "இரங்கற்பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இரக்கம் உண்டாக்கினார்கள். பரமசிவனால் கைலையின் கீழ் அமிழ்த்தப்பட்ட இராவணன் அவருக்கு இரக்க முண்டாக விளரியைப் பாடினான் என்ற பொருள்பட "விராய் மலர்ப் பூங்குழலிபாகன் மகிழ்வினோங்கும் வெள்ளிமலைக் கீழ்க் கிடந்து விளரி பாடும், இராவணனார்" என்று ஒரு கவி பாடியுள்ளார். இச்செய்யுட் பகுதி விளரி இரங்கற் பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க. பாடுங்கால் இவ்விலக்கணங்களோடு பாடவேண்டும் என்ற விஷயங்களை மிக விரிவாக இசை நூல்கள் கூறும். குற்றம் சில வகைப்படும். இக்குற்றங்கள் பாடுவோர்பால் இருத்தல் கூடாவென விலக்கியும் நூல்கள் கூறும்.

 -டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்

 -மகா மகோபாத்தியாயர்

      ஆரியப்பிராமணருடைய ஆதிக்கத்தால் தமிழர்க்குரிய பண்கள் நாளேற நாளேறப் பயில்வாரற்று மங்கிப்போகவே வடதிசை யிராகங்கள் வளர்ந்தோங்கி எங்கும் வழங்கத்தலைப்பட்டன. பழைய பண்கள் ஓய்ந்த காலம் இன்னதென்று குறிப்பிடல் அசாத்தியமாயினும், மாணிக்க வாசகர் காலத்தே அவை மங்கியிருக்கத் துவங்கியிருக்கலாமென்றும், திருவிசைப்பா காலமாகிய கிறித்தாப்தம் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டில் தேவதாஸ் தோத்திரங்களுக்கு மாத்திரம் அர்ஹமாக ஒதுங்கியிருக்க வேண்டுமென்றும் எண்ணுதல் பழுதாகாது. அஃது எப்படி ஆயினுமாகுக. இப்போது நம் நாட்டில் பரவும் பூபாளம், மாளவி,