பக்கம் எண் :

மொழி111

பங்காளம், காம்போதி, கல்யாணி, காந்தாரி முதலிய இராகங்கள் தங்கள் பெயராலேயே தங்கள் பிறப்பிடம் உணர்த்துகின்றன. இக்காலத்து வழங்கும் மற்ற இராகங்களும் அப்படியே புறநாட்டு வரமென்று நிரூபித்தல் அரிதன்று. இங்ஙனம் இசைகள் மாறவே, புதிய வடதேசத்து இராகங்களில் அமைந்த சிற்சில பதம் கீர்த்தனை இவற்றுட் கலக்கக் கலக்க பழைய ஆட்டம் பாட்டு வடிவாய்த் தமிழ் நாடக நூல்களும் நடப்பவாயின.

 -நாடகத் தமிழ் ஆராய்ச்சி-இலக்குமி.

      1இந்தப் பண்களும் கூத்துகளும் எவ்வகையினவென்று ஒருவராலும் இப்பொழுது கூறமுடியாது. அவைகளின் இடத்தை இந்து ஆரிய இராகங்களும் நாட்டியங்களும் எடுத்துக்கொண்டன.

 -தமிழ் ஆராய்ச்சி.

2. இசைக்கருவிகள்

      இசைக்கருவிகள் ஐந்து. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, என்பன. தோற்கருவிகளாவன பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி பெரும்பறை என்பன.
      மத்தளம்-மத்து ஓசைப் பெயர், இசையினாலாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலால் மத்தளம் என்னும் பெயராயிற்று. சல்லிகை யென்பது சல்லென்ற ஓசை யுடைத்தாதலாற் பெற்ற பெயர். ஆவஞ்சி யெனினும், குடக்கை யெனினும், இடக்கை யெனினும் ஒக்கும், அதற்கு ஆவி

     1. "No one can now say what these pans and dances were like. Their place were gradually taken up by the indo-Aryan Ragams and Natyams." (Tamil Studies.)