பக்கம் எண் :

மொழி113

     "நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல், அஃதாவது செல்வத்தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்த இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரும் அடுப்போரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தாரெனவும், பின்னும் அவர்கள் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும் பிறவும் இந் நிகரனவாகிச் சுவைப்பட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்."

-இளம்பூரணவடிகள்

     "தமிழ் நாடகம் முதலிலுண்டானது மத விடயமாகவே யென்பது துணியப்படும். அது கடவுளர் திருவிழாக்காலங்களில் ஆடல் பாடல்களிரண்டையுஞ் சேர நிகழ்த்துவதினின்றும் உண்டாயி்ற்று. சில காலத்தின் பின்னர்க் கதைநடையான மனப்பாடங்களும் உடன் கூடின, அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள சம்பாஷணைகளும் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகத் தமிழ் வேத்தியல் பொதுவியல் என்ற பிரிவினதாகி அரசர்களானும் ஏனையோரானும் ஆதரித்து வளர்க்கப்பட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டினாதல் அல்லாக்கால் அதனினுஞ் சற்று முற்காலத்தினாதல் நாடகத்தமிழ் உயர்நிலை பெற்றிருத்தல் வேண்டும். நாமுணர்ந்துள பழமையான நாடகத் தமிழ்நூல்கள் அனைத்தும் அக்காலத்தே நின்று நிலவின வாதலினென்க. ஆகவே அது குற்றங் குறைவு இல்லாது உண்டான தொழிலென்றே ஆதியில் மதிக்கப்பட்டது. இனி நாடகத் தமிழ், உயர்நிலை வீழ்நிலை அழிநிலை என்ற மூன்றுவகை நிலையும் அடைந்து உருக்குலைந்து போன பின்னரே யாம் அதனைக் கண்ணுறுகின்றனம்.

 -நாடக வியல்

     "நாடகமெனப் பொதுப்பெயர் கூறத்தகுந்த பொழுது போக்கிலிருந்ததுதான் பல்வேறு ரூபமான எல்லா `நற்கலைழு (Fine arts) களும் பிறப்பனவாயினும், பாட்டும் பண்ணும் ஆட்டமுமாகிய மூன்றும் அதனின்றும் நேரே உற்பவிக்