பக்கம் எண் :

114தமிழகம்

கின்றன. கால விளம்பனத்தாலும் நாகரிகத் தேர்ச்சியாலும் பாவனையில் நடத்திக்காட்டும் தொழில்களை நன்கு விளக்கத்தக்க வசனங்களைக் காதுக்கினிமைபெறக்கோத்து மொழிதலும், கண்ணுக்கினிமைபெறக் கரசரணாதி அவயவங்களாலும் முகக்குறிகளாலும் அபிநயித்துக் காட்டலும், வழக்கத்தில் வரவே, பாட்டும் அதனுடன் புணர்ந்த பண்ணும் அவையிரண்டுடன் கலந்த ஆட்டமும் தனித்தனி பிறப்பனவாயின. பாட்டின் சீர், இசை, தளை, அடி முதலியவற்றையும் அப்பாடல் விளங்கும் நவரசங்களையும் மாத்திரம் கவனித்து அபிவிருத்தி பண்ணினால் அது வித்துவத்சன பூசிதமான காவியம் என்னும் சிறப்புப்பெயர் பெற்று நிற்கும். அப்படியே பண்ணை மாத்திரம் விசேடமாகக் கவனித்துச் சொற்கோத்தல் சங்கீதமெனத் தனித்து வளரும். ஆட்டமும் அவ்வாறே சில சாதியாருள்ளும் தனிப்படத் தழைத்ததேனும் முன்னவை யிரண்டுங் கலந்து வழங்கலே பெரும்பான்மை. அங்ஙனங்கலந்து வழங்கும் போது நாடகமென ஒரு சிறப்புப் பெயர் கூறுதல் வழக்கம்.
     "நமது தமிழ் நாட்டிலும் இம் முறையே இம் மூன்று நற்கலைகளும் தொன்றுதொட்டு ஏற்பட்டு வந்தமை பற்றியே தமிழை, இயல், இசை, நாடகம் என்று மூன்று வகையாக முன்னோர் வகுத்தனர். இம் மூன்றும் நாளேற நாளேற வேறு வேறு உருக்கொண்டு மாறுபாடு அடைந்துள்ள வென்பது யாவருக்குந் தெரிந்த விஷயம். காவியம் அடைந்திருக்கும் ஒரு சிறு விகற்பம் பத்துப்பாட்டையாவது கலித்தொகையையாவது இப்பொழுது வழங்கும் கம்பர் இராமாயணத்தோடோ பிரபுலிங்க லீலையோடோ ஒப்பிடுங்கால் விளங்காதிராது. அவ்வாறே இப்போது போக்கியமாக வழங்கும் தேவாரப் பண்ணோடு தோடி பைரவி என்னும் இராகங்களில் ஆக்கப்பட்டுள்ள முத்துத் தாண்டவர் கீர்த்தனங்களை ஒப்பிடுங்கால், இசைத்தமிழ் அடைந்திருக்கும் வேற்றுமை தெரியலாகும். முன்னோர் கேட்டு மகிழ்ந்த இசைகளும், அவற்றைத் துத்தி வாத்தியங்களிற் காட்டிய இசைக்கருவிகளும் பெரும்பாலும் மாய்ந்து