பக்கம் எண் :

மொழி115

போயின வென்றே சொல்லலாம். `இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்ழு என்ற திருவாசகத்தாலேயே இக்காலத்தில் வழங்கும் வீணையன்று, சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்களில் நமது மனத்துக்கு எளிதில் வாராவண்ணம் வருணிக்கப்பட்டிருக்கும் யாழென்பது வெளிப்படையாகும். யாழ், திராவிடர்க் குரியதும், வீணை, வடதிசை ஆசிரியர் தென்திசைக்குக் கொண்டுவந்த புதியதோர் இசைக்கருவியுமாம். இங்ஙனம் தமிழ் இசைகளும் மாண்டு போன வண்ணமே தமிழ் நாடகங்களும் பலவாறு வேற்றுமைப்பட்டு அனாதி வடிவம் இன்னதென்று ஊகித்தல் அருமையாம்படி இறந்து போயினதாகக் காணப்படுகின்றது.
     "இப்போது தமிழில் வழங்கிவரும் நாடகங்கள் யாவும் அருணாசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகத்தைப் பின்றொடர்ந்தனவா யிருப்பதினாலும் கீ்ாத்தனைச் சாயை பழைய நூல்களிற் காணாமையாலும் பூர்வீக நாடகமென்று நிச்சயிக்கத்தக்கது யாதொன்றும் இதுவரை வெளிப்படாமையானும், தமிழ்மொழிக்கே யுரித்தான யாதேனும் நாடகம் இருந்தது தானும் உண்டோ என்று சிலர் ஐயுறல் இயல்பேயாம். ஆனால் அதைப்போலவே சந்தேகிப்பதற்கு முதற்காரணம் நாடக மென்பது வடமொழியிலும் ஆங்கிலத்திலும் நாம் கண்டு பழகும் நாடகத்துக்கே பெயராயிருத்தல் வேண்டுமென்னும் மயக்கமெனத் தோன்றுகின்றது,,,,,,,,,,,,,,,,,,,, 1நாடக மென்னும் வடமொழிக்குச் சரியான தென்மொழி கூத்து என்பதே. திவாகரத்தின் படி கூத்தின் மறுபெயர்கள் "நடமே நாடகங் கண்ணுணட்டம் படிக மாட றாண்டவம் பரத-மாலுத றூங்கல் வாணி குரவை யியல் நிவய நிருத்தம்" முதலியனவாம். ஆதலால் தமிழர் கூத்து நாடகமென்று சிறப்பித்துக் கொண்டவை யனைத்தும் ஆடலோடமைந்தவையாக இருந்

     1, நாடகம் என்னும் சொல் வடமொழி யென்பதற்கு ஆதாரம் இல்லை. தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களில் நாடகம் என்னும் சொல் பயின்று வந்திருக்கின்றது. நட, நடி முதலிய தமிழ் மூலங்களை நோக்குவார் நாடகம் வடசொல்லெனக் கூற ஒருப்படார்.