பக்கம் எண் :

மொழி117

     "அப்படியானால் தமிழ்நாடகங்கள்" யாதொன்றும் இப்போது காணக் கிடையாமைக்கு விசேட காரணந் தேடவேண்டியதற் கவசியமில்லை.
     `படித்தறிந்து வியத்தலையே பயனாகக்கொண்ட பழைய இயற்றமி்ழ்க் காவியங்களுக்குள் இக்காலம் நமக் கெட்டினவை எத்தனை, இருந்த விடமே தெரியாது இறந்து போனவை எத்தனை எனக், கணக்கிடுவோமாகில் இப்போது சீவிக்கிற மனிதர்களையும் இறந்தோரையும் `எண்ணிக் கொண்டற்றுழு என வன்றோ மதிக்கத்தக்கதாக விருக்கின்றது. படித்தமாத்திரத்தில் நவரசானுபவந் தரத்தக்க இயற்றமிழினது கதி இங்ஙனமாயின், ஆடிக்கண்டாலொழிய இன்பம் பயவாத நாடகப்பாட்டுக்கள் கால விளம்பனத்தில் அழிந்துபோனது ஒரு அதிசயமா? மதாபிமானத்தில் ஆழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியும் மூவர் தேவாரங்களும் ஒருவாறு அவற்றின் பண்ணும் பிற்காலத்தார் அறியும்படி நிலைநில்லாவிடில் பழைய இசைத் தமிழும் இவ்வாறே உண்டாயிருந்ததோ இல்லையோ என்னும் சந்தேகத்துக்கன்றோ இடந்தருவதாக நிற்கும்? சுத்தவித்தியா விஷயமான அபிமானம் நீங்கிக் கேவலம் சமயச் சச்சரவுகளால் மூடப்பட்ட இடைக்காலத்தில், இயற்றமிழ்க் காவியத் தலைமைபெற்ற சிந்தாமணி சிலப்பதிகாரம் முதலிய நூல்களே தப்பினது தாலிப்பாக்கியமாய் இருக்குமானால், கான விஷயங்களாகிய இசைத்தமிழ் நூல்களும், ஆட்டப் பாட்டான நாடக நூல்களும் மண்ணுற மாண்டு போனமை சற்றுமே ஒரு ஆச்சரியமா? இசைத் தமிழும் நாடகத் தமிழும் தம்முள் நெருங்கிய சம்பந்தமுடையனவாக எக்காலமு மிருக்கவேண்டு மென்பது எளிதிற் றுணியத் தக்கதே,
     "துவக்கத்தில் புதியன சிறுபான்மையும் பழைய சிந்து தாழிசை முதலியன மிகுதியாகவு மிருந்திருக்க வேண்டும். காலஞ் செல்லச் செல்லப் பழையன குறைத்தும் புதிய கீ்ர்த்தனங்கள் மிகுந்தும் வந்தன. அருணாசலக் கவிராயர் இராம நாடகத்திலும் குற்றாலக் குறவஞ்சி முத