லிய பழமைபற்றிய நாடக வியல்களிலும், இவை இரண்டு வகைப்பட்ட ஆட்டப்பாட்டுகள் கலந்து கிடப்பன காணலாகும். அருமை பெருமைகளிற் சிறந்த அருணாசலக் கவிராயர் தமது ஒப்பற்ற நாடகம் அமைத்த பின்னர் அதனையே வாய்ப்பாடமாகக் கொண்டு பிற்காலத்தவர் பற்பல நாடகஞ் செய்தனர், அவற்றுள்ளும் பழைய சிந்து முதலியவை இராவணப் போரில் விபீஷணன்போல, இன்னும் இறவாமல் ஆங்காங்குத் தலை காட்டி நிற்றல் புலப்படக் கூடும். இவ்வாறு பழைய நாடகப் பாட்டினியல்பு முற்றும் மாறுதலடைந்து போயினும், ஒரு விஷயத்தில் பழைய தமிழ் நாடக வியல்பு சற்றும் மாறுபடாது நின்றுகொண்டது. இக்காலத்து நாடகங்கள் எந்த எந்த வடிவமாக இருந்தபோதிலும், அவற்றுள் ஒன்றேனும் ஆட்டமின்றி நடந்தேறுதல் கூடியதன்று. இவ்வாட்டமே முற்கூறியபடி தமிழ்க் கூத்திற்கும் ஏனைய நாடகங்களுக்கும் உள்ள தலைமையான வேற்றுமை. பண், பா, அரங்கு முதலிய யாவும் வேற்றுமைப்படும். தமிழ்க் கூத்துக்குரிய ஆடல் ஒன்றும் இதுவரைக்கும் பேதப்படவில்லை. | -நாடகத்தமிழ் ஆராய்ச்சி | "இவ்வாறு தோன்றி வளர்ந்த நாடகத்தமிழ் வீழ்நிலை யடையப் புகுந்தது. அதற்குக் காரணம் யாது? ஒழுக்கநிலை வகுக்கப் புகுந்த ஆரியரும் சைனரும் நாடகக் காட்சியாற் காமமே அறிவினும் மிகப் பெருகுகின்ற தென்னும் போலிக் கொள்கை யுடையராய்த் தமது நூல்களிற் கடியப்படுபவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர்.1 அக்காலத்திருந்த அரசர்க்குத் துர்ப்போதனை செய்து நாடகத் தமிழைத் தலையெழ வொட்டாது அடக்கிவந்தனர். ஒளவையாரும் திருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையைத் தீவினை யச்சத்தின்பாற் படுத்திக் கூறுஞ் |
| 1. கூத்தும் விழவும் மணமுங் கொலைக்களமு கூர்த்த முனையுள்ளும் வேறிடத்து-மோத்தும் ஒழுக்கு முடையவர் செல்லாரே செல்லின் இழுக்கு மிழவுந் தரும். | (ஏலாதி-63.) | | | |
|
|