பக்கம் எண் :

மொழி119

சைனர்கள் நாடகத் தமிழ்நூலைக் கடிந்ததோ ராச்சரியமன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக் கிடையில் நாடகத்தமிழ் எவ்வாறு தலையெடுத்து ஓங்கப்போகின்றது. அதன்மேல் இயற்றமிழ்க் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத் தமிழை வளரவொட்டாது தடுப்பனவாயின. இவ்வாறு நாடகத் தமிழுக்கு நாற்புறத்திலுந் தடைகளமைக்கப்பட்டமையின் அஃது அழிநிலை எய்தத் தலைப்பட்டது. பண்டிதரானோர் கடிந்து நாடகத் தமிழைக் கைவிடவே அது பாமரர் கையகப்பட்டு இழிவடைந்து தெருக்கூத்தளவிலே நிற்கின்றது. -தமிழ் மொழியின் வரலாறு.
     சிந்தாமணி சூளாமணி முதலிய காமச்சுவை மலிந்த சைன காப்பியங்களை நோக்குமிடத்து சைனர்கள் நாடகத் தமிழை வளரவொட்டாது தடுத்தார்கள் என்று கூற இடமில்லை.

12. தமிழ் இலக்கணத்தின் சிறப்பியல்பு

     வடமொழி தமிழ் என்னும் இருமொழிப் புலமையும் ஒருங்கே நிரம்பிய சிவஞான சுவாமிகள் "தமிழ் மொழிப் புணர்ச்சிக்கட்படும் குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னோரன்னவும் வடமொழியிற் பெறப்படா" என்றும், "ஈண்டுக் கூறும் பொருட் பாகுபாடுகள் பொதுவாகாது தமிழிற்கே சிறந்து வேறொன்றாற் பெறப்படாமையின் இப்பொருள்பற்றி வரும் பரிபாடல், கலி, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, ஆற்றுப்படை, பதிற்றுப்பத்து முதலிய செய்யுள் ஆராயப்புகுந்தாற்கு இப்பொருட் பாகுபாடு உணராக்கால் குன்று முட்டிய குரீஇப்போல இடர்ப்படுவர்: என்றும், "சோதிடம் முதலிய பிறகலைகளெல்லாம் ஆரியத்திலும் தமிழினும், ஏனைமொழி