பக்கம் எண் :

மொழி121

1. கல்லின் பெயர்

     1. பாஷாண - ஆண்பால்
     2. சிலா - பெண்பால்
     3. உபலம் - ஒன்றன்பால்
     ஆதலால் தமிழ் பால்திணையில் இனிது.
     "ஒரு மொழியிலுள்ள சொற்களினொலிகளை வரிவடிவிற் காண்பிப்பதற்குக் கருவியாயுள்ளது எழுத்து. அங்ஙனமே தமிழ்மொழியுள் ஒலியும், அதற்குரிய எழுத்தும், ஒற்றுமை பெற்றுள்ளன. வேறு சில பாஷைகளைப் போல் அவை ஒன்றுக்கொன்று வேற்றுமையுடையனவல்ல.

வடமொழியில்

     ப்ரஹ்ம என்றெழுதிப்       ப்ரம்ஹ என்றொலிக்கின்றனர்.
     சிஹ்ம "                      சிம்ஹ "
     வஹநி "                      வந்ஹி "
     விஜ்ஞானம் "                  விக்ஞானம் "

2. வினைத்தெளிவு

     "வினைச்சொல் ஒருவன் ஒருத்தி ஒன்றன் செயல்களைக் குறிக்குஞ் சொல். தமிழ்மொழியில் வினைகள் அவற்றைத் தெளிவுபெறக் குறிக்கின்றன. பிற மொழிகளிலுள்ள வினைச்சொற்கள் ஆண் பெண் ஒன்றன்பால்களின் வேறுபாட்டை விளக்குகின்றில.
     ஆங்கிலம் வடமொழி
     செல்கின்றான் (He) goes
     செல்கின்றாள் (She) goes
     செல்கின்றது (It) goes
(ஸ) கச்சதி
(ஸா) கச்சதி
(தத்) கச்சதி