அகத்தியர் தமிழுக்குச்* சிற்றகத்தியம் பேரகத்தியம் என்னும் இலக்கண நூல்கள் செய்தா ரென்ப. அவற்றுள் ஒன்றேனும் இக்காலத்துக் கிடைக்கவில்லை. சிதறுண்ட சூத்திரங்களெனச் சிலவற்றைத் தொகுத்து, ழுபேரகத்தியத்திரட்டுழு ஒன்று அச்சடித்திருக்கின்றனர். அச் சூத்திரங்களின் சொன்னடையும், பொருணடையும் நோக்கும் இளஞ் சிறாரும் அவை பண்டைத் தமிழன்று என்று துணிந்துகொள்வர். அகத்தியத்துக்கு முன் குமரம் என்னும் ஓர் இலக்கணம் இருந்ததாகக் கூறுப. பேராற்று நெடுந்துறையன் பெருநூல்களுள்ளும் இடைகழிச் செங்கோடன் இயனூல் முதலிய இலக்கணங்களும் இருந்து மறைந்துபோனதாகச் செங்கோன் தரைச்செலவு என்னும் நூலால் அறிகின்றோம். தொல்காப்பியத்திற் பலவிடங்களில் காணப்படும் `என்பழு, `என்மனார் புலவர்ழு, `இயல்புணர்ந்தோர் மொழிபழு போன்ற சொற்றொடர்களால் தொல்காப்பியர் காலத்தும் முன்பும் பல இலக்கண இலக்கியங்கள் இருந்தன வென்பது தெளிவு. |