பக்கம் எண் :

124தமிழகம்

மாறனலங்காரம், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து, நேமிநாதம், நன்னூல் முதலியன.
     பிற மொழிகளிலுள்ள இலக்கணங்களும் பிறவுமாயுள்ள நூல்கள் முன்னிருந்தவற்றிலிருந்து விரித்து எழுதப்பெறும். தமிழ்நூல்களோ முன்னிருந்தவற்றைச் சுருக்கி எழுதப்படுவனவாகும். உதாரணத்துக்குத் தொல்காப்பியம், நன்னூல், இலக்கணச் சுருக்கம் முதலியவற்றை நோக்குக.

13. சங்கம்.

     "தலைச் சங்கம் இடைச் சங்கம் கடைச் சங்க மென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளுங், குன்ற மெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனுமென இத் தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினா ரென்ப. அவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மார் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையு மென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோ னீறாக எண்பத்தொன்பதின்ம ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.
     "இனி இடைச்சங்கமிருந்தோர் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன்மாறனும், துவரைக் கோனும், கீரந்தையு மென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருள்ளிட்ட மூவாயிரத் தெழுநூற்றுவர் பாடினா ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும்,