பக்கம் எண் :

மொழி125

வியாழமாலை யகவலுமென இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூத புராணமு மென இவையென்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாற னீறாக ஐம்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.
     "இனிக் கடைச்சங்க மிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்க் கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரு மென இத் தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்ம....ரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறு நூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமு மென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற் றியாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்ம ரென்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப." -இறையனா ரகப்பொருளுரை.
     களவியலுரையிற் கூறப்பட்ட சங்கப் புலவர்கள் பலர் சங்கநூற் செய்யுட்களை இயற்றிய புலவர்களாகக் காணப்படுகின்றமையின் களவியலுரையிற் காணப்படும்