பக்கம் எண் :

126தமிழகம்

சங்க வரலாறு ஆதாரமற்ற கட்டுக்கதை என்று கருத இடமில்லை. பண்டை நாளிற் சங்கமிருந்து தமிழ் வளர்த்தமையை.
"சிறைவான் புனற்றிலைச் சிற்றம்பலத்து
மென் சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்த வொண்
டீந்தமிழின் றுறை"

-திருக்கோவையார்

"ஞான சம்பந்த னுரைசெய் சங்கமலி செந்தமிழ்"

-சம் - தே.

"திருவால வாயில், எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்கமிருந்து"

(பெரியபுராணம்)

"சங்கத் தமிழ்மூன்றும் தா" (நல்வழி)

"........................................................................................ -பாண்டியர்

பாடு தமிழ் வளர்த்த கூடலின் வடாஅது"     (ஆசிரியமாலை)

"நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக்
கிழிதருமிக் கருளினான் காண்"

(திரு. நா. தே. திருப்பத்தூர்)

     என வரும் தெய்வப்பெற்றியாளர் திருவாக்குகளா னோர்க.
     "மதுரைத் தலபுராணம் குலசேகர பாண்டியன் முதல் மதுரேசுவர பாண்டியனீறாக எழுபத்துநாலு பாண்டியரைப் பற்றிச் சொல்லுகின்றது. இப்போதுள்ள மதுரையில் அரசு புரிந்த பாண்டியர்கள் இவர்கள்தாம். கடைசிப் பாண்டியனுக்கு முதல் ஆண்ட கூன்பாண்டியன் அல்லது நெடுமாறன் ஏழாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இருந்தவனென்பது துணியப்பட்டது. அவனது ஆட்சியில் சங்கமிருந்ததாக ஒரு வரலாறுங் காணப்படவில்லை. கி. பி. நாலாம் நூற்றாண்டு வரையிலிருந்த மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தில் சங்கத்தைப் பற்றிய செய்தி இறந்தகால நிகழ்ச்சியாகக் காணப்படுகின்றது. கி. பி. இரண்டாம்