நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை யென்னும் நூல்களில் சங்கத்தைப்பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. மூன்றாஞ் சங்கத்தின் கடைசிப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி யென்பது கன்னபரம்பரைச் செய்தி. இப்பாண்டியன் காலத்திலேயே திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. இப்போது அப்பாண்டியன் தல புராணத்திற் சொல்லப்படும் 47 பாண்டியருள் எவனென்று தீர்மானிக்க முடியவில்லை. புராணமெழுதியவர் தமிழ்ப்பெயர்களைச் சமக்கிருதத்தில் மொழிபெயர்த்து எழுதியதே இதற்குக் காரணம். அப்படி யிருந்தாலும் இப்பாண்டியனுடைய காலத்தை ஒருவாறு நிச்சயித்தல் கூடும். இவன் கரிகாற்சோழனின் தந்தையாகிய இளஞ்சேட்சென்னியின் காலத்தில் இருந்தவனென்று சொல்லப்படுகின்றது. அவன் காலம் கி. பி. 50-90 வரையிலாகும். ஆகவே, சங்கத்தின் இறுதிக்காலம் முதலாம் நூற்றாண்டிலென்று துணிதல் வேண்டும். அதற்குப் பின் சங்கமிருந்ததற்குஉண்மைச் சான்றுகள் கிடைக்கவில்லை. சங்கம் ஒடுங்கியது முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலாகும். இனிச் சங்கம் தொடங்கிய காலத்தைக் குறித்து ஆராய்வோம்.. 196 பாண்டியர்கள் 3900 ஆண்டுகளாகச் சங்கம் நடத்தினார்களென்று முன் ஓரிடத்தில் கூறப்பட்டது. ஓர் அரசனுக்குரிய காலம் இருபது என வைத்துக் கணக்கிட்டமையின் இக்காலக் கணக்கு ஏற்பட்டது. தென் மதுரையிலே நடந்த சங்கம் 86 அரசர் ஆதரவின்கீழ் நடைபெற்ற தென்றும் சொல்லப்படுகின்றது. அப்படியா யிருந்தால் 89 பாண்டியருக்குரிய கால எல்லை 1780 ஆண்டுகளாகின்றன. 1780 ஆண்டுகளை 3900 ஆண்டுகளினின்றும் எடுத்துவிட எஞ்சி நிற்பது 2120 ஆண்டுகளாகும். இதனையே தென்மதுரையைக் கடல்கொண்ட காலமெனக் கொள்ளுதல் வேண்டும். சலப் பிரளயமுண்டான காலம் கி. மு. 2105 என யூதர் குறிப்பிட்டிருக்கின்றனர். இக்காலக் கணக்குத் தென்மதுரையைக் கடல் கொண்டதெனச் சொல்லப்படும் காலத்தோடு ஒத்திருக்கின்றது. கிறித்துவுக்கு முன் 3900 வரையில் சங்கந் தொடங்கியதெனப் பெரும்படி | | |
|
|