பக்கம் எண் :

128தமிழகம்

யாகக் கூறலாம். பழைய தமிழகம் மிகவும் சீர்திருத்தம் பெற்றிருந்த தென்பதையும், அது பிறநாடுகளுடன் வாணிகம் நடத்திய தென்பதையும் நினைவில் வைத்துக்கொண்டாற் தமிழ்ச்சங்கம் அக்காலத்தில் நடைபெற்றிருக்கக் கூடாது என்று ஒருபோதுங் கருத இடம் இருக்கமாட்டாது. ரெகோஜின்1 என்பார் வேத இந்தியா என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு:- "ஊர் என்னும் பட்டினத்தில் ஊர் எயா என்னும் வேந்தனால் கி. மு. மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டுவிக்கப்பட்ட பழைய கட்டிடங்களைக் கிளறிப் பார்த்தபோது தமிழகத்தில் மலையாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்கமரத்துண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விந்தியத்திற்கு வடக்கே அவ்விதமான தேக்க மரம் காணப்படுவதில்லை. அது ஐயாயிரமாண்டுகளுக்குமுன் தமிழர்கள் எவ்வளவு சீர்திருத்த மடைந்திருந்தார்கள் என்பதை விளக்குகின்றது. ஆகவே உலக முழுமையிலும் பாண்டிய வம்சமே மிகப் பழையதென்றும் தென்மதுரையில் அவர்களால் நிறுவப்பட்ட சங்கமே எல்லாச் சங்கங்களுக்கும் முற்பட்டதென்றும் சொல்வதில் ஆச்சரியத்துக் குரியது ஒன்றுமில்லை. பழைய மதுரையின் அழிவுக்குப் பிற்பாடு பாண்டியருக்குத் தலைநகரமா யிருந்தது கபாடபுர மென்று இராமாயணத்திற் படிக்கின்றோம். இரண்டாவது நடத்திய சங்கம். 59 பாண்டியரின் காலம் 1180 ஆண்டுகளாகும். இது இரண்டாஞ் சங்கத்தின் இறுதிக் காலமும் மூன்றாஞ் சங்கத்தின் தொடக்கமுமாகிய (2120-1180) கி. மு. 940 க்குக் கொண்டுவந்து விடுகின்றது. இரண்டாவது தலைநகரமாகிய கபாடபுரம் கடற்பெருக்கினால் அழிக்கப்பட்ட தென்பதும் அவ்வழிவுக்குப் பிழைத்திருந்த பாண்டியனே மறுபடியும் கூடலில் சங்கம் நிறுவினானென்பதும் கன்ன பரம்பரை வரலாறுகள். தலபுராணத்தின்படி மூன்றாவது சங்கத்தை நிறுவினவன் உக்கிரபாண்டியனாவன். மகாபாரதத்தில் சொல்லப்படும் பப்புரவாகன் இவனே. இவன் மலையத்துவச

     1. Regozin