பக்கம் எண் :

மொழி129

பாண்டியனின் பேரனென்றும் மலையத்துவசனின் ஒரே குமாரி அருச்சுனனை மணந்தாளென்றும் மகாபாரதம் கூறுகின்றது. தலபுராணத்திற் கூறப்படும் `சுந்தரன்ழு என்னும் பெயர் அருச்சுனனைக் குறிக்கும். மலையத்துவசனை அருச்சுனன் மணலூரிற் சந்தித்ததாக மகாபாரதங் கூறுகின்றது. கூடலைத் தலைநகராகக் கொண்ட பாண்டியன் மணலூரிலிருந்து வந்தானென்று பழைய திருவிளையாடல் புராணம் சொல்லுகின்றது. இதனால் கபாடபுரத்தின் அழிவுக்குப் பிறகும் கூடலைத் தலைநகராகக் கொள்வதற்கு முன்னும் மணலூர் பாண்டியனுடைய தலைநகராயிருந்ததெனச் சொல்லவேண்டும்; அல்லாவிடில் மணலூரும் கபாடபுரமும் ஒன்று எனக்கொள்ளல் வேண்டும். இராமாயணம் பாரதம் என்னும் இரண்டு நூல்களிலும் பாண்டியனுடைய தலைநகரமாகச் சொல்லப்படுமிடங்கள் ஒரே யிடத்தைக் குறிக்கின்றன. இராமாயணத்தில் வான்மீகி சுக்கிரீவன் வானரவீரருக்குக் கூறிய கூற்றாக வைத்துச் சொல்லுமிடத்து, `கபாடம்ழு தாம்பிரபரணி கடலோடு சங்கமிக்குமிடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்திரை செய்ததைச் சொல்லுமிடத்து அவன் கலிங்கநாட்டுக்கு ஊடாகச் சென்று கோதாவரியையும் கிழக்குத்தொடர் மலையிலேயுள்ள மகேந்திரத்தையுங் கடந்து காவேரியைப் பின்புறமாக விட்டுக் கிழக்குக் கடலோரத்திலேயிருந்த மணலூரை யடைந்தானெனச் சொல்லப்படுகின்றது.
     மகாபாரத்தத்திற் காணப்படும் மணலூரென்பது `மணற்பட்டினம்ழு என்னும் பொருள்தரும் தனித் தமிழ்ப்பெயராகும். `கபாடம்; என இராமாயணத்திற் காணப்படுவது ;அலைவாய்ழு என்னும் தமிழ்ப்பெயரின் சமக்கிருத மொழிபெயர்ப்பாகக் காணப்படுகின்றது. அலைவாய் துறைமுகம் என்பன ஒரு பொருட் சொற்கள். பழந்தமிழ்க் கடவுளாகிய முருகன் கோயிலுக்கு இருப்பிடமாகிய செந்தில்மலை அடியோரத்தில் இருந்த துறைமுகப் பட்டினத்துக்கு அலைமுகப் பட்டின மெனப் பெயருளது. அது இப்போதுள்ள