பக்கம் எண் :

130தமிழகம்

திருச்செந்தூருக்குப் பக்கத்திலே யிருந்தது. பழைய முருகன் கோயில் கடலுள் மறைந்துள்ளதெனச் சொல்லப்படுகின்றது. கபாடபுரம் அல்லது அலைவாய் அக்காலத்து எல்லாவிடங்களாலும் அறியப்பட்ட பாண்டிய அரசருடைய துறைமுகப் பட்டினமென்றும், அதனருகே அரசனுடைய மாளிகையும் அரசிருக்கையுமிருந்த ஒரு சிறு பட்டின மிருந்ததென்றும் கருத இடமுண்டு. மணலூரிலிருந்த கடைசிப் பாண்டியன் அலைவாயைக் கடல் கொண்டதற்பின் தனது தலைநகரை மதுரைக்கு மாற்றியிருக்கவேண்டும். இம் மாற்றம் பாரதப் போருக்குப் பின்னாதல்வேண்டும். இதற்குப்பின் கூட்டப்பட்ட மூன்றாஞ் சங்கத்தை 49 பாண்டியர்கள் நடத்தியி ருக்கிறார்கள். இச்சங்கம் இடையீடின்றி 10 நூற்றாண்டுகளாக உக்கிரப்பெருவழுதி காலம் வரையில் நடைபெற்றிருக்கின்றது. இவனுடைய காலம் கி. பி. 30 க்கும் 50 க்கும் இடையில் என்று முன்னமே முடிவுசெய்யப்பட்டது. கி. பி. 50 சங்கத்தின் இறுதிக்காலமாகும். (சங்க காலத்தைப் பற்றிய குறிப்பு-பண்டிதர் சவரிராயன்-தமிழர் புராதனக் கலைஞன்- பகுதி 2 -எண் 1)1

14. அகத்தியர்

     அகத்தியரைப்பற்றிய செய்திகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் மற்றும் நூல்களிலும் மலிந்து காணப்பெறுகின்றன. அப்படியிருந்தபோதும் அவரைக் குறித்த உண்மை வரலாறனைத்தும் ஆராய்ந்து கோவைப்படுத்திக் கூறுவது இலகுவன்று. அவருடைய பிறப்பைக் குறித்துப் பலவகையான கதைகளுண்டு. அவற்றுட் பெரும்பாலன இயற்கைக்கு மாறாகக் காணப்படுத்தலின் அவை நம்பப்படத்தக்கனவல்ல. தென்னாட்டு முனிவருள் ஒருவர் புலத்தியர். இவருடைய புதல்வருக்கு அகத்தியரென்று பெயர். புலத்தியர் இலங்கை வேந்தனாகிய இராவணனின் பாட்டன்

     1. (Notes on Sangam Age by Pandit Savarirayan-Tamilian Antiquary, Vol. 2, No. 1)