பக்கம் எண் :

மொழி131

அகத்தியர் கலசத்திற் பிறந்தாரென்பதும், அவர் பெருவிரலி னளவினரென்பதும், கடலைக் குடித்தாரென்பதும், விந்தியமலையை அடக்கினாரென்பதும் புராணக்கதைகள். அக்கதைகள் நேராகப் பொருள்கொள்ள வியலா. சுவாமி திருக்கலியாணத்துக்கு இருடிகளும் முனிவரும் தேவரும் மேருவில் ஈண்டியபொது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்த கதைகளுமப்படியே. புராணக் கதைகளைக் கொண்டு ஒரு வகையான முடிபும் கொள்ளுதல் கூடாது. விருத்திரன் மழைமுகி லென்றும் இந்திரன் மழைபெய்தற் கிடமாயுள்ள விண்ணென்றும் தத்துவார்த்தம் பகர்கின்றது. அது உண்மையாயின் அகத்தியர் நகுடனைச் சபித்தது, கடலைக் குடித்தது முதலிய கதைகள் கற்பனையாய் மாறுகின்றன. இப்படியே புராணக் கதைகளுக்குத் தத்துவப்பொருள் கூறப் புகுமிடத்து, உண்மையென நம்பப்பட்டு வரும் பல கதைகள் கற்பனையாகத் தோன்றுகின்றன. அகத்தியர் இமயமலையை அடுத்துள்ள நாடுகளினின்றும் பெயர்ந்து தமிழ்நாடு போந்தார் என்பதற்குப் புராணக்கதைகளும் அவற்றைத் தழுவி நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில் எழுதிய கதையுமன்றி வேறு பிரமாணங்கள் இல்லை. தமிழ் ஆரியப்போர் உண்டான காலத்து இதைப் போன்ற கதைகள் முளைத்தல் இயல்பு. அகத்தியர் மிகப் பழைய காலந்தொட்டே பொதியமலையில் வசித்தா ரென்பதற்கு அகத்தியன் என்னும் விண்மீனுக்குப் `பொதியின் முனிவன்ழு என்னும் பெயர் பரிபாடலிற் காணப்படுதலே போதிய சான்று. "தெண்ணீரருவிக் கானார் மலையத் தருந்தவன்" (யாப்பருங்கலக் காரிகை.) அகத்தியர் குடமலையிற் றங்கிப் பொதியின் மலைக்கு வந்தமையின் அவர் குடமுனி யெனப்பட்டார் என்றும், பின்னுள்ளார் இப்பொருளை மறந்து (குடமுனி) கலசயோனி என்னும் பெயர்களை வழங்கினர் எனவும் கூறுகின்றனர்.
     "இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து அவனை ஆண்டுவராமல் விலக்கி" என நச்சினார்க்கினியர் கூறும்