பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை13

பில்லாதவர்கள் எனக் கூறுதல் பொருந்தாது. ஒருகாலம் வங்காளத்தின் கீழ்ப்பாகம் தமிழர் அதிகாரத்தின்கீழ் இருந்தது. புத்தருடைய காலத்துக்குமுன் தமிழர் அனம் (Annum) என்னும் நாட்டைவென்று அதற்குப் பொங்லொங் (Bong Long) என்னும் பெயரிட்டார்கள். வங்காளத்தில் `லக்லம்ழு உடைய சந்ததியார் கி. மு. ஏழாம் நூற்றாண்டு தொடங்கிக் கி. பி. 258 வரை நீண்டகாலம் அரசு புரிந்திருக்கிறார்கள். சரித்திர காலத்தில் இந்தியாவுக்குப் புதிதாக வந்தவர்கள் எனச் சொல்லப்படும் ஆரியர், மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சியால் தமிழரிலிருந்து வேறுபடவில்லை. திராவிடர் முற்காலத்தில் தோற்றத்திலாவது மன வலிமையிலாவது ஆரியருக்குக் குறைந்தவரல்லர். தமிழர் பழமைதொட்டு தென்னிந்தியாவில் வாழ்ந்தார்கள் என்று ஒப்புக்கொண்டால் புதிதாக வேறு சாதியார் கூட்டங் கூட்டமாக வந்தபோது முன்னிருந்த தமிழர் என்ன செய்தார்கள் என்னும் கேள்வி எழுவது இயல்பு. அக்காலத்தில் வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையே கிடந்த கடல் தரையாக மாற இருநாடுகளும் தொடுக்கப்பட்டன. தெற்கே இருந்தவர்கள் வடக்கே சென்றார்கள். இந்தச் செழிப்பும் செல்வமும் பொருந்திய வடநாட்டை அடைய முடியாதவர்களா யிருந்தால் அவர்கள் (தமிழர்) புதிதாக வந்தவர்களைத் துரத்தியிருப்பார்கள். தெற்கே இருந்த தமிழர் இயற்கைக்கு மாறாக நடந்துகொண்டார்களென்று சொல்வதற்கு இடமில்லை."
இந்திய வானநூற்படி இலங்கையில் இராவணனுடைய இராசதானிக்கு ஊடாகச் சென்றதாகச் சொல்லப்படும் நிரட்சரேகை (Meridian) இலங்கைக்கு மேற்கே 400 மைல் தூரத்திலிருக்கும் மாலைத் தீவுக்கூடாகச் செல்கின்றது.
"இக் கரைப்பாகத்தில் அமிழ்ந்துப்போய்க் காட்டின் பகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறிகள் இன்னும்

     1. B.C. Mazumdar. The Madras Review, July 1922