இருக்கின்றன. இப்பகுதி அமிழ்ந்துபோன லெமூரியாக் கண்டத்தின் பகுதியோ அல்லது பிந்திய காலத்ததோ என்பது மயங்கக் கிடக்கின்றது."
-கதிர்காமவேலர்-சர்.பி. அருணாசலம்
"இலங்கையிலே இருந்த தெய்வங்கள் வெகுண்டு ஒரு கடல்கோளை உண்டுபண்ணின. 400,000 தெருக்களும் 25 அரண்மனைகளும் இராவணனுடைய கோட்டைகளும் இருந்த தூத்துக்குடி முதல் மன்னார் வரையுமுள்ள நிலத்தைக் கடல் அடித்துக்கொண்டு போய்விட்டது. இது துவாபர ஊழியில் நிகழ்ந்தது. அப்படியே கழனி இராசாவாகிய திச ராசன் காலத்தில் 100,000 பட்டணங்களையும் 970 மீன்பிடிக்காரர் குப்பங்களையும் 400 முத்துக்குளிகாரர் குறிச்சிகளையும் கடல் விழுங்கிவிட்டது. -இராசாவளி
"பாஸ்கராசாரியார் எழுதிய வான நூற்குறிப்பில் நடுக்கோடு (Equator) பழைய இலங்கைக் கூடாகச் செல்கின்றது. இதனால் இராவண இலங்கை இப்போதுள்ள சுமத்திராவாக இருக்கலாமெனக் கருதுகின்றனர்."1
-Ravana of Lanka by N.S. Adhikari.
"லெமூரிய அல்லது சிலாற்றின் கொள்கை." இக் கொள்கையின்படி தமிழர் தோன்றின இடம் இமயமலை உண்டாவதன் முன் இந்து சமுத்திரத்தில் மூழ்கிப்போன லெமூரியாக் கண்டமாகும். இப்பூகண்டம் மேற்கே மடகாசிகர் வரையும் கிழக்கே மலாய்த் தீவுகள் வரையும் பரந்து தென்னிந்தியா ஆஸ்திரேலியா என்னும் நாடுகளையும் தொட்டுக்கொண்டிருந்தது. அப்படி யிருந்தால் இந்நிலப் பரப்பு நீருள் மறைவதன் முன் தமிழர் தெற்கினின்றும் இந்தியாவை அடைந்திருத்தல் வேண்டும். -Tamil Studies, P.21
`சாவாழு என்னும் தீவின் வடகரையில் மதுரை நீரிணை யென்னும் ஒரு சிறிய நீரிணை உளது. அதற்கு வடக்கே
1. இவர் கி.பி. 1114இல் பிறந்து 1150-சித்தாந்த சிரோமணி என்னும் நூல் இயற்றியவர்.