15. தொல்காப்பியர் | தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவரென்ப. அவர் இயற்பெயர் யாதெனப் புலப்படவில்லை. சமதக்கினி முனிவரின் புதல்வர் தொல்காப்பியரென நச்சினார்க்கினியர் கூறுவர். சமதக்கினியைப் பற்றி எழுந்த புராணப்பகுதிகளில் அங்ஙனம் கூறப்படாமையான், அக்கூற்று வலியடையதாகாது. தொல்காப்பியர் அகத்தியத்தைப் பின்பற்றி நூல் செய்தாரென்பது பரம்பரைக் கதை. அவர் தமது நூலகத்துத் தாம் அகத்தியத்தைப் பின்பற்றி நூல்செய்தா ரென்றாவது அகத்தியர் தம் ஆசிரிய ரென்றாவது குறிப்பிட்டிலர். தொல்காப்பியத்துக்குச் சிறப்புப்பாயிரஞ் செய்த பனம்பாரனாரும் இவ் வரலாறு ஒன்றனையேனும் கூறிற்றிலர். இவை ஆராய்ச்சிக் குரியன. | 1. தொல்காப்பியம் | தொல்காப்பியம் என்பதற்குப் பழமையைக் காப்பது என்பது பொருள். தொல் என்பது பழமை. காப்பு-இயம்; காப்பதாகிய நூல். பழைய நூல்கள் பற்பல காரணச் செறிவால் மாண்டுபோதலும் இறந்தகால நிலைமையைக் காப்பதற்கு நூல் எழுதல் வேண்டியதாயிற்று. தமிழ் நாட்டைக் கொடுங்கடல் கொண்டது. மக்கள் நூலோடு மாண்டனர். எஞ்சியோர் எஞ்சிய உணர்ச்சி கொண்டு நூல்களைப் புதுப்பிக்குங்கால் கொள்கை மாறுகொண்டு கலாய்த்தனர். அவற்றிற்கெல்லாம் தலைகொடுத்து நிலைத்து நின்றது இந்நூல் ஒன்றே யாதலின், இது தொல்காப்பியமெனத் தகுவதென்க. தொல்காப்பியர் செய்தமையின் தொல்காப்பியம் என்னும் பெயருண்டாயிற்றோ, அன்றித் தொல்காப்பியஞ் செய்தமையின் தொல்காப்பியர் என்னும் பெயருண்டாயிற்றோ வென்பது ஆழ்ந்து கருதி அறுதியிடற்பாலது. தொல்காப்பியம் என்னும் நூற் பெயரி | | |
|
|