நூலாகிய ஐந்திரம் தொல்காப்பியப் பாயிரத்திற் குறிக்கப்பட்ட நூலெனக் கொள்ள இடமில்லை. இந்திரன் என்னும் பெயருடன் பல காலங்களில் விளங்கிய பலர் நூல்கள் யாத்திருத்தல் கூடும். | தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனக் கொள்வதற்கு அதனகத்திற்றானே பல சான்றுகள் காணப்படுகின்றன. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சூ. 24, 27, 28 களால் அக்காலத்து ஞ்ய, ந்ய, ம்ய, ம்வ என மொழிக்கிடையில் வருஞ் சொற்கள் உண்டு என விளங்குகின்றது. இக்காலத்துள்ள தமிழ்நூல்கள் ஒன்றிலேனும் அவ்வகையான சொற்கள் காணப்படவில்லை. கி. பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட திருக்குறளிலும் அவ்வகையான சொற்கள் ஆளப்படவில்லை. அவ்வகையான சொற்கள் வழங்கிய காலம் குறைந்த பட்சம் திருக்குறளுக்கு மூன்று நூற்றாண்டு வரையி லிருத்தல் கூடும். | தொல்காப்பியம் சொல் சூ. 29, 32 க்கு மாறாகச் சமைத்து, சலம், சதுக்கம், சந்தி, யூகம், யவனர், சங்கு, சமம் முதலிய சகர முதற் சொற்களும் பிறவும் கடைச் சங்க நூல்களிற் காணப்படுகின்றன. | தொல்காப்பியர் கடைச்சங்க காலத்தில் நூலியற்றியிருப்பாராயின், | "சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ, ஐ, ஒளவெனும் மூன்றலங் கடையே" | "ஆ, எ, ஒ வெனும் மூவுயிர் ஞகாரத்துரிய ஆவோ டல்லது யகர முதலாது" | | எனச் சூத்திரஞ் செய்திருக்கமாட்டார். ஆகவே, தொல்காப்பியஞ் செய்யப்பட்டு நீண்ட காலத்துக்குப் பின்னரே தவிர்க்கப்பட்ட சகர முதற் சொற்களும் பிறவும் நூல்களில் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். | "பாணினி முனிவர் குறிப்பிடுகின்ற 64 ஆசிரியர்களுள் இந்திரன் என்பார் ஒருவராகக் காணப்படுகின்றார். | | |
|
|