பக்கம் எண் :

136தமிழகம்

பாணினிக்குப் பின் பாணினீயமே எவராலும் கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. தொல்காப்பியர் பாணினிக்குப் பின் னிருந்தவராயின் தொல்காப்பியத்தில் ஐந்திரம் என்பதற்குப் பதில் பாணினீயமே கூறப்பட்டிருக்கும். பாணினி முனிவர் கி. மு. 7 ஆம் நூற்றாண்டில் விளங்கியவர் என்று சிலரும், கி. மு. 4 ஆம் நூற்றாண்டில் விளங்கியவரென வேறு சிலரும் கூறுவர். ஆகவே, தொல்காப்பியர் கி. மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியவரல்லர். (Tamil Studies)

2. வடசொல்

     "வடசொல்" என்பதற்கு இளம்பூரணவடிகள் "ஆரியர் சொற்போலுஞ் சொல்" எனப் பொருள் கூறினார். தமிழின் பகுதியாகிய வடசொல் நன்றாகச் செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயர் பெற்றதென்பது சிலர் கருத்து. யாழ்ப்பாணத்துப் பேரகராதியில் வடசொல் கிரந்தம் என்னுஞ் சொற்களுக்கு வடதமிழ் என்னும் பொருள் காணப்படுகின்றது. வடசொல் வடதமிழாயின் அது தமிழே யென்பது துணிபு.1 ஆரியர் பேசுந் தமிழை நகைச்சுவைக்கு உதாரணமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர். ஆரியர் திருத்தமில்லாத பேச்சுடையவராதலினாலேயே

     1. "Dialects of the same family of languages were spoken throughout India, except in the Vindhyan regions in the Neolithic Age; and that is what has been called the Dravidian family. The distinction between the spoken dialects of North India, to which the name Guadian has been given by modern scholars and which have been held to be degenerations of Sanskrit or of Prakrit, and those of Southern India to which the name Dravidian has been given, is, I hold, a distinction without a difference, except that the North Indian dialects have been very much more profoundly affected by Sanskrit than those of South India The Neolithians of North India spoke languages of their own which, I hold, were structurally allied to the so-called Dravidian family of languages and not to Sanskrit or Prakrit" (Stone age in India, p. 43)