"முற்கூறியாங்குச் சிறந்த பெண் மனைவி, கிழத்தி எனப்படுவாள். இவள் இந்நிலத் தலைவன் மனைவி. மற்றைப் பெண்கள் இடைச்சியர் எனப்படுவார்கள். | "மருதநில மக்களுள் அங்ஙனம் உயர்ந்த ஆடவன் ஊரன், மகிழ்நன் எனப்படுவன், இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் உழவர், கடையர் எனப்படுவர். | "முற்கூறியாங்குச் சிறந்த பெண் கிழத்தி, மனைவி எனப்படுவாள், இவள் இந்நிலத் தலைவன் இற்கிழத்தி. மற்றைப் பெண்கள் உழத்தியர், கடைசியர் எனப்படுவார்கள். | "நெய்தல் நில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் சேர்ப்பன், புலம்பன் எனப்படுவன்; இவன் இந்நில மக்களின் தலைவன். மற்றை ஆடவர் பரதர், அளவர், நுளையர் எனப்படுவர். | "முற்கூறியாங்குச் சிறந்த பெண் பரத்தி, நுளைச்சி எனப்படுவாள், இவள் இந்நிலத்தலைவன் மனைவி. மற்றைப் பெண்கள் பரத்தியர், அளத்தியர், நுளைச்சியர் எனப்படுவார்கள். | "பாலை நில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் விடலை, காளை, மீளி எனப்படுவன், இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் எயினர், மறவர் எனப்படுவர். | "முற்கூறியாங்குச் சிறந்த பெண் எயிற்றி எனப்படுவாள், இவள் இந்நிலத்தலைவன் மனையாள். மற்றைப் பெண்கள் எயிற்றியர், மறத்தியர் எனப்படுவார்கள். | "தமிழர்கள் பண்டைக் காலத்தில் இங்ஙனம் நிலம் பற்றிய பகுப்பையே உடையவர்களாயிருந்தார்கள். இவர்களுள் ஒரு நிலத்து ஆடவன் தன்னிலத்துப் பெண்ணை மணந்து கொள்ளினுங் கொள்வான், வேறு நிலத்துப் பெண்ணை மணந்து கொள்ளினும் கொள்ளுவான். நிலம் பற்றிய இப்பகுப்பு உயர்வு தாழ்வைக் குறித்து வந்த | | |
|
|