தன்று, இவர் இன்ன நில மக்கள் என்பதை உணர்த்தும் அளவினதேயாகும், இப்பகுப்பு எதுபோன்றதெனில் இவன் கோவூரான், இவன் குன்றத்தூரான், இவன் காஞ்சிபுரத்தான், இவன் காவேரிப்பாக்கத்தான் என்பனபோன்றதாகும்." | 2. சாதி | பழைய தமிழர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கவில்லை. எல்லா நாடுகளிலும் எப்படி அந்தணர்(Priests), அரசர் (rulers), வணிகர் (merchants), வேளாளர் ( agriculturists), கைத்தொழிலாளர் (labourers), கீழோர் (menials), காணப்படுகின்றனரோ அப்படியே தமிழ்நாட்டிலுமிருந்தனர். ஒவ்வொருவரும் தம் சீவனத்தின் பொருட்டு மேற்கொண்ட தொழில்கள் பற்றியே சாதி ஏற்படுவதாயிற்று. தகப்பனாயுள்ள ஒருவன் தான் பிழைப்புக்காகச் செய்துவந்த தொழிலையே தன் மகனும் பின்பற்றவேண்டுமென விரும்புவதியல்பு. இவ்விருப்பமே தொடக்கத்தில் தனித்தனி சாதி தோன்றுவதற்குக் காரணமாயிருந்தது. இப்போது ஒவ்வொரு சாதியினரைக் குறிக்கும் பெயரும் அவ்வவர் மேற்கொண்டிருக்கும் தொழிலைப் பற்றியதாகவே காணப்படுகின்றது. பிற்காலத்து ஒவ்வொரு குலமும் பிறப்பினாலே உண்டானதென்னும் நம்பிக்கை உண்டாயது. | "பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" | | என்னும் குறளும், | "நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை-தொல்சிறப்பி னொண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை யென்றிவற்றா னாகுங் குலம்" | | என்னும் நாலடியாரும் பிறப்பினால் குணமுண்டு என்பதை மறுக்க எழுந்தனவாகும். | | |
|
|