பக்கம் எண் :

150தமிழகம்

ஆரிய நாட்டவர்க்குரிய சாதிக் கட்டுப்பாடு, சமயம், பழக்க வழக்கம் முதலாயின தமிழரினின்றும் புறம்பானவை. முதற்கண் அவர்கள் சாதிப்பிரிவு நிறம்பற்றி ஏற்பட்டது. "வருணம்" என்னும் பெயரே அதனைப் புலப்படுத்துகின்றது. பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் எனத்தங் குழுவினைப் பிரித்துக்கொண்டு, தாம் வென்று அடிப்படுத்திய மக்களைச் சூத்திரர் என்னும் நான்காம் பிரிவாகக் கொண்டனர். இவர்களுக்கு அடிமைத்தொழில் மாத்திரம் உரித்து. இவற்றின் பிரிவு அவர்கள் நீதிநூல்களாகிய மிருதிகளில் பரக்கக் காணலாம். மேற் காட்டப்பட்ட வெவ்வேறு வருணத்துப் பெண்கள் ஆண்கள் சோரமாகவோ சோரமில்லாமலோ ஒருவரை ஒருவர் மருவப் பிறந்த சந்ததியாருக்கு ஒவ்வொரு தொழில் உரிமையாக்கப்பட்டது. உதாரணம்,-பிராமணனுக்கு வைசிய நங்கையிடத்திற் பிறந்தவன் அம்பஷ்டன். இவனுக்குத் தொழில் இரண வைத்தியஞ் செய்தல். க்ஷத்திரியனுக்குப் பிராமணப் பெண்ணிடத்துப் பிறந்தவன் சூதன். இவனுக்குத் தொழில் தேரோட்டுதல்.
     ஆரிய மக்கள் தென்னாடடைந்து தமிழருடன் கலந்துறைந்த ஞான்று ஆரியக் கொள்கைகள் பல தமிழகத்திற் சுவறின.1 அதனால், பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்,

     1. "The Hindu theory that mankind is divided into four Varnas, or groups of castes-Brahmana Kshatriya, Vaisya and Sudra was wholly foreign to the southerners" "Dravidian culture:-The Brahamanical ideas and institution, although universally diffused in every province have not been wholly victorious. Prehistoric forms of worship and many utterly un-Aryan social practices survive specially in the peninsula among that people speaking Dravidian languages. We see there the strange spectacle of any exaggerated regard for caste coexisting with sorts of weird notions and customs allied to Brahman traditions. Were it is probable that the Dravidian civilization is even older than the Indo-Aryan Brahmanical culture of the north