சூத்திரர் என்னும் வடநாட்டாருக்குரிய பெயர்கள் தமிழ் நாட்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பெயர்களோடு ஒன்றாக வைத்துக் கருதப்படலாயின. இக் கருத்தைத் தழுவியே பிற்காலத்து விளங்கிய இளம் பூரணவடிகள், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலாயினோர் நூல்களுக்குரை வகுத்தனர். "ஒரு பொருளுக்குப் பல பெயர்களைத் தேடிக் கூட்டிக் கூறுதலையே நோக்கமாகக் கொண்ட நிகண்டாசிரியர்களும், பிற்காலத்து இலக்கியஞ் செய்த சில ஆசிரியர்களும், தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்களின் கருத்தினைக் கருதாது, வேளாளர்க்குச் சூத்திரர் என்னும் பெயரினையுங் கூட்டிக் கூறிவிட்டார்கள். அது பெரும் பிழையாம். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடர் தொல்லாசிரியர்களின் கருத்தை நன்குணர்ந்தவ ராதலின் வேளாளரைச் சூத்திரரென எங்குங் கூறாராயினர். | பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என மக்களை நான்கு குலங்களாகப் பிரிக்கும் முறை முற்றும் தென்னாட்டவர்க்குப் புதிது. பிராமணர்களது கருத்துக்களும் கொள்கைகளும் எல்லாப் பகுதிகளிலும் பரவியிருந்தபோதும் அவை முற்றாக வெற்றி பெறவில்லை. திராவிடமொழிகள் வழங்கும் நாடுகளில் மக்களிடையே பழைய காலத்தைய ஆரியரல்லாதாரின் வழிபாடுகளும் பழக்க வழக்கங்களுமே, காணப்படுகின்றன, பிராமணரின் பரம்பரையான வழக்கங்களும் சாதிப்பிரிவுகளும் கவனிக்கப்படுகின்றனவாகத் தெரியவில்லை. திராவிடரின் நாகரிகம் இந்து ஆரியரின் நாகரிகத்துக்கு முற்பட்டதாயிருத்தல் கூடும். தெற்கில் ஆரியக்கொள்கைகளுக்கு எப்பொழுதும் எதிர்ப்பு இருந்து வந்தது. |
| which was long regarded in the south as an unwelcome intruder to be resisted strenuously." | "The amount of Aryan blood in the people to the south of Narbada is extremely small in fact negligible." (Oxford History of India-Vincent Smith. C.I.E.). | | |
|
|