கிழிந்த சிதாஅ ருடுத்து மிழிந்தார்போல் ஏற்றிரந் துண்டும் பெருக்கத்து நூற்றிதழ்த் தாமரை யன்ன சிறப்பினர் தாமுண்ணின் தீயூட்டி யுண்ணும் படிவத்தர்தீயவை ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம் அவிர்முருக்கந் தோலுரித்த கோலர் துவர்மன்னும் ஆடையர் பாடினரு மறையர் நீடின் உருவந் தமக்குத் தாமாய இருபிறப் பாளர்க் கொரூஉகமா தீதே. | -தகடூர்யாத்திரை. புறத்திரட்டு. | |
பார்ப்பான் |
அகப்பொருட் டுறையில் வாயில்களில் ஒருவராகச் சொல்லப்படும் பார்ப்பான் வேறு, அந்தணன் வேறு என்பது, |
"தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப" "காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் கிழவோன் குறிப்பினை யெடுத்தனர் மொழிதலும் ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய | |
என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களால் புலனாகும். பார்ப்பான் என்பதற்கு நன்றும் தீதும் ஆராய்ந்துரைப்போன் எனப் பொருள் கூறுவர் பேராசிரியர், |
2. அறிவர் |
இவர்கள் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தையும் அறிந்த பெரியோர். "யோகிகளாய் |