உபாயங்களால் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் இவ் வறிவரில் ஒருசாரார்" என்று கூறுவர் நச்சினார்க்கினியர். | "மறுவில் செய்தி மூவகைக் காலமு நெறியி னாற்றிய வறிவன் றேயமும்" | | என்பது தொல்காப்பியம். | "மூவகைக்காலமும் நெறியில் ஆற்றலாவது பகலுமிரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும், மின்னும், ஊர்கோளும், தூமமும், மின்வீழ்வும், கோணிலையும், மழைநிலையும், பிறவும் பார்த்துக் கூறுதல்" என்பர் இளம்பூரணவடிகள். இவர்கள் கணி (சோதிடர்) எனவும் படுவர். | 3. தாபதர் | இவர் தவவேடம் பூண்டு விரதவொழுக்கம் மேற்கொண்ட பெரியோர், "தவஞ்செய்வோர்க்குரியன ஊனசையின்மை, நீர் நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், வாய்வாளாமை என எட்டும்; இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீ நாப்பணும் நீர் நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலும், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையும், துறந்த நாட்டொட்டும் வாய்வாளாமையும் பொருளென்றுணர்க. "இனி யோகஞ் செய்வார்க்குரியன, 1ழுஇயமம், நியமம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என எட்டும். | | 1. இயமம்: கொல்லாவிரதம், மெய்ம்மை கூறல், கள்ளாமை, பிறர்பொருட் காதலின்மை, இவ் வயினிந்தியம் அடக்கலும். இயமம் (திவாகரம்) | 2. நியமம்: தவமொடு தூய்மை, தத்துவாநூ லோதல், மனமுவந் திருத்தல், தெய்வம் வழிபடல், நினையுங்காலை நியமமாகும். (திவாகரம்) | | |
|
|