பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்155

`பொய் கொலை களவே காமம் பொருணசை
யில்வகை யைந்து மடக்கிய தியமம்ழு
`பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மைழு
`பூசனைப் பெரும்பெய மாசாற் களித்தலொடு
நயனுடைய மரபி னியம மைந்தேழு
`நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென்
றொத்த நான்கி னொல்கா நிலைமையோ
டின்பம் பயக்குஞ் சமய முதலிய
வந்தமில் சிறப்பி னாசன மாகும்ழு
`உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந்
தந்த மியக்கந் தடுப்பது வளிநிலைழு
பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம
லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமேழு
`மனத்தினை யொருவழிப் நிறுப்பது பொறைநிலைழு
`நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற்
குறித்த பொருளொடு கொளுத்த னினைவேழு
அஙஙனங் குறித்த வாய்முதற் பொருளொடு
தான்பிற னாகாத் தகையது சமாதி."

(ந. உரை. மேற்கோள்)

தவத்தினியல்பு

"நீஇ ராட னிலக்கிடை கோட
றோஒ லுடுத்த றொல்லெரி யோம்ப
லூரடை யாமை யுறுசடை புனைதல்
காட்டி லுணவு கடவுட் பூசை
யேற்ற தவத்தி னியல்பென மொழிப."
"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்"