தேவாரம் திருவாசகம் பாடியவர்கள் காலத்து விளங்கிய சிவாலயங்களின் பெருக்கமே சைவமதம் தென்னாடுகளிற் பழமையே நிலைபெற்றிருந்த தென்பதற்குச் சான்றாகும்.
தமிழ் இலக்கணத்திற் சொல்லப்படும், உயிர், மெய் உயிர்மெய், வேற்றுமை முதலிய சொற்களே தமிழ்மக்களின் உயரிய சமய உணர்ச்சிக்கு உறு சான்று.
"பழந் தமிழர்களது சமயம் ஆரியர் சம்பந்தம் பெற்றிருக்கவில்லை. காலகதியில் தமிழர்களுடைய சமயம் ஆரியர் சமயக் கோட்பாடுகளுடன் கலப்புற்றுத் தற்கால நிலைமையை அடைந்திருக்கின்றது. தென்னிந்தியருடைய சமய நூல்கள் சமக்கிருத மணம் பெற்றிருந்தாலும், தமிழ் நாட்டுக்கே சொந்தமான கொள்கைகள் உடையனவாயிருக்கின்றன வென்று மாக்ஸ்முல்லர் போப்பையர் முதலியோர் கூறுகின்றனர். ஆகமங்கள் தமிழருடைய பழக்க வழக்கம் சமயம் முதலியவற்றை தழுவிச் செய்யப்பட்டனவென்று ஆசிரியர் சேஷகிரி சாத்திரியார் கூறுவர். ஆரியர் சமயக் கொள்கை தமிழ்நாட்டிற் பரவுவதன்முன் அந்நாட்டுக்குச் சொந்தமான சமயக் கொள்கைகள் இருந்தன வென்பது உண்மையே.
"சரித்திர காலத்துக்குமுன் கொற்றவை, முருகன், வருணன் முதலிய கடவுளர்களைத் தமிழ்மக்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் அவர்கள் ஒரே முழுமுதற் கடவுள் உண்டென்னும் நம்பிக்கை இல்லாதவர்களா யிருந்தார்களல்லர். சிவ வழிபாடு ஆதியில் தமிழருக்குள் இருந்தது என ரகோசென் (Ragozen) என்னும் பண்டிதர் கூறுவர். சிவ வழிபாடு வடநாட்டிற் பார்க்கிலும் தென்னாட்டுக்கே உரிமை பூண்டது என பெர்கூசன் என்னும் (Fergusson) அறிஞர் `மரமும் சர்ப்ப வணக்கமும்ழு என்னும் நூலில் கூறுகின்றனர். சிவபெருமான் தமிழ்க்கடவு ளென்றும், அவர் தியானப் பொருளாகவும், புலனுக் ககப்படாததைக் கட்புலன் கதுவும் இலிங்கவடிவாகவும் பாவிக்கப்பட்டா ரெனவும் ஸ்டிவென்சன் (Dr.Stevenson) என்னும் அறிஞர்