பக்கம் எண் :

160தமிழகம்

கூறுவர். பூவும் புகையும் கொண்டு கடவுளை வழிபடுதலே பழந்தமிழர் மரபு. பூ இதயத்தையும் புகை அது உருகுவதையும் குறிப்பிடுவன. தென்னாட்டவனாகிய இராவணன் சிவலிங்கப் பூசை புரிபவனென்றும், அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் பொன் இலிங்கத்தை எடுத்துச் சென்று பூவும் புகையும் கொண்டு வழிபட்டானென்றும் சொல்லப்படுகின்றது. சுவாமி விவேகானந்தர் சொல்வது போல இலிங்கம் ஆண்குறி சம்பந்தமானதன்று. ஆநந்தக் குமாரசுவாமி அது மக்கள் சம்பந்தமானதன்று எனப் புகன்றதே பொருத்தமுடையது. தென்குமரி முதல் வடபெருங்கல் ஈறாக இலிங்க வழிபாடு காணப்பெறுகின்றது. இவ்வழிபாடுதான் மிகவும் பழமையானது. சிவலிங்க வழிபாடு மகாபாரதத்திற் கூறப்படுகின்றது. அசுவத்தாமா அருச்சுனனுக்குத் தோற்றான். அருச்சுனன் வெற்றிக்குக் காரணம் அவன் கடவுளை இலிங்க வடிவில் பூசித்ததும், அசுவத்தாமா மூர்த்திவடிவில் வழிபட்டதுமேயா மென வியாச முனிவர் கூறுகின்றார். வேதங்களும் உபநிடதங்களும் இவ் வழிபாட்டைக் குறிப்பிடுகின்றன. தென்னிந்தியாவில் கற்கால லிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. வேத காலத்துக்கு முற்பட்ட இலிங்கவடிவில் சிவ வழிபாடு இருந்ததெனக் கூறும் பி. தி. சீனிவாச ஐயங்கார் கூற்றுக்கு இது சிறந்த சான்றாகும்.                                       (திராவிட இந்தியா)

     ஆரியர் தமிழர்களோடு கலக்க நேர்ந்த ஞான்று ஆரியர் தமிழகத்தில் பரவியிருந்த சிறந்த பல கொள்கைகளைப் பின்பற்றித் தமது சமயத்தைச் சீர்திருத்தஞ்செய்து கொண்டனர்.

     1வேதகால நாகரிகம் ஹோமர் காலத்தைய கிரேக்கரது அல்லது கிறித்தவ ஆண்டின் தொடக்கத்தைய


     1. The vedic culture which resembles that of the Homeric Greeks or the Celtic Irish at the beginning of the Christian era, or that of the pre-Christian Teutons and slaves becomes transformed in the epics into the Hindu culture through the influence of Dravidians. The Aryan idea of worship during the earliest period was to call on