பக்கம் எண் :

16தமிழகம்

மைகளை அறிந்து கொள்ளுதல் முடியாததன்று. இரண்டாம் காலப் பகுதியில் தென்னிந்தியா கடுந்தரையாக விருந்தது. அது மூன்றாம் காலப் பகுதியில் இந்து சமுத்திரத்துக் கூடாக தென் ஆப்பிரிக்கா வரையில் அகன்றிருந்த கண்டத்தின் பகுதியாகும். அதன் வடக்குக் கரையில் எதோ (Tethys) கடல் இருந்தது. அக்கடல் மூன்றாம் காலப் பகுதியின் நடுப்பகுதியிலும் பிற்பகுதியிலும் கிழக்கு மேற்காக ஆசியாவுக்கு ஊடாகப் பரந்திருந்தது. இங்கேதான் இமயமலையின் தளம் இருந்தது.
`இரண்டாம் உகத்தின் முற்பகுதி தொடக்கத்திலிருந்து நாலாம் உகத் தொடக்கம் வரை இமயமலை இருக்கும் இடம் கடலாயிருந்தது.ழு2

2. குமரிக்கண்டம்

கடல் வாய்ப் பட்டதன் காரணம்

"இது (ஆஸ்திரேலியா) விந்தை மிக்க நாடு; இங்குள்ள மரஞ்செடிகளிற் பல இயற்கையாய் வேறெந்த நாட்டிலும் வளர்வதில்லை. அவ்வாறே வீணைப்பறவை, சுவர்க்கப் பறவை, ஏமு முதலிய பறவைகளிற் பலவும், கங்காரு முதலிய விலங்குகளிற் சிலவும் உலகில் வேறெங்கும் இயற்கையிற் காணக் கிடைப்பனவல்ல. மக்களும் அவ்வாறே. இவற்றால் கொள்ளக்கிடப்பது யாதெனில், ஆஸ்திரேலியா முதலில் உலகொடு சார்பு பெற்றிராத ஒரு நில உருண்டை என்பதே. உண்மையில் இதுவோர் விண்வீழ்மீன்.

       old world from west to east, and in this sea were laid down the marine deposits of the Himalaya.
       "In the Hiamalaya the geological sequence, from the ordovician to the Eocine, is most entirely marine."

--Encyclopaedia Britannica.

1. `நில நூலார் பூமியின் வயசை ஐந்து காலப் பகுதிகளாகவும் பின் ஒவ்வொரு காலப் பகுதியையும் பல கூறுகளாகவும் பிரித்திருக்கின்றனர்.