தமிழர் சமயத்துக்குப் பிரமாண நூல்கள் நான்மறை. "நான்மறை முற்றிய வதங்கோட்டாசான்" என்னும் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் பண்டை மறைகள் நான்கு இருந்தன வென்பது புலனாகும். இன்னும் சங்க நூல்கள் நான்மறையைக் குறித்துப் பல்லிடங்களிற் கூறின. "அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே" (தொல்-எ.102.) என்பதால் அம்மறை இசையுடன் பயிலப் படுவது என்பது விளங்குகின்றது. அந்தணர் மறை என்றதனால் அம்மறைகள் அறவொழுக்கத்தின்பால் நின்றோராகிய அந்தணரால் பயிலப்பட்டன வென்பதும் அறியக் இடக்கின்றது. துறவிகளாகிய மறையவர்கள் வாக்கினின்றும் போந்த நிறைமொழிகளே மந்திர மெனப்படும். |