கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சி நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை யெல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக் கெல்லார் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர். | (தொ. செ. மேற்கோள்) | |
இன்னும் தேவார திருவாசகங்களில் பல்லிடங்களில் இறைவன் ஆலநீழலில் அமர்ந்து பக்குவம் வாய்ந்த நான்கு தவத்தர்களுக்கு மறைகளை அருளிச்செய்த வரலாறு கூறப்படுகின்றது. 1சங்க நூல்களில் ஆலமர் செல்வன் என்னும் பெயர் இறைவனுக்குப் பெயராக வந்திருக்கின்றது. தொல்காப்பியர் "செந்தமி ழியற்கை சிவணிய நிலத்து" வழக்குக் கூறப்புகுந்தாராதலின், அவர் கூறிய மறைகள் சிந்துநாட்டாருக் குரியதன் றென்பது தானே பெறப்படும். |
"சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்" "தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்" "ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்பேழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறான தென்றிசை வையகஞ் சுத்தமே" "தமிழ்மண் டலமைந்துந் தாவிய ஞான முமிழ்வது போல வுலகந் திரிவர்" "அவிழு மனமுமெம் மாதி யறிவுந் தமிழ்மண் டலமைந்துந் தத்துவ மாமே" "செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி யிதனை நவமுரைத் தானே" | (திருமந்திரம்) | |
|
1, "ஆல்கெழு கடவுட் புதல்வ" (முருகு) "நீல நாக நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த" (சிறுபாண்) "ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்" (கலி) "ஆலமர் செல்வன் மகன்" (மணிமே) | |