பக்கம் எண் :

164தமிழகம்

என வருவனவற்றால் தமிழருக்குரிய முதனூல்களாகிய மறைகள் தமிழில் இருந்தன வென்பது புலனாகும்.
     வேதாகமங்கள் சதாசிவமூர்த்தி வாயிலாக வெளிவந்தன என்னும் ஐதிகமும்,

"சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்"

     என்னும் திருமந்திரமும்,
"மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்"
     என்னும் திருவாசகமும்,
"சதாக்கிய மென்னுந் தத்துவத்தில் வீற்றிருந்து
சதாசிவ னமலன்றான்"
"நயந்தா ருயிரெல்லா நண்ணவற மாதி
பியம்பினா னாகமநா லேழு"
     என்னும் சைவ சமயநெறியும், தென்னாட்டுச் சிவப் பிராமணர்கள் தங் கோத்திர முதல்வர்கள் சதாசிவமூர்த்தியின் முகங்களினின்றும் தோன்றினார்களெனக் கூறுகின்றமையும் ஒத்த கருத்துடையனவாகக் காணப்பெறுகின்றன.
     தமிழ்மொழியிற் காணப்பட்ட மறைகளும் ஆகமங்களும் அங்கங்களும் இறந்துபட்டன. திருமந்திரம் ஞானாமிர்தம், சித்தாந்த சாத்திரங்கள் முதலியன பழைய தமிழர் மறைப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டெழுந்தனவேயாம்.
     இப்பொழுது ஆரிய மொழியிற் காணப்படும் மறைகளும் அங்கங்களும் பிறவும் பழந்தமிழர் கைக்கொண்ட நூல்களாகமாட்டா. இருக்கு முதலிய நூல்கள் ஆரியர் இந்தியாவை அடைந்த பின்னர் அவர்களாற் பாடிச் சேர்க்கப்பட்ட பாடற்றொகைகளாகக் காணப்பெறுகின்றன. அவ்வேதங்கள் சிவபெருமானை முழுமுதலாக ஒப்புக் கொள்ளவில்லை. வேதங்கள் அக்னி, வாயு, சூரியன் முதலிய