பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்165

வர்களால் வெளியிடப்பட்டன வென்று மனுப் பிரசாபதி கூறுகின்றார்.
     யாகங்கள் நிறைவேறும் பொருட்டு இருக்கு, எசுர், சாமம் என்னும் பெயர்களையுடைய அநாதியான வேதத்தை அக்னி, வாயு, சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் வெளிப்படுத்தினர் (பிரம்மா). (மனு-அத், 1-23)
     வேதங்கள் மூன்றென்னும் பொருளில் "வேதம் த்ரயீ" என்று நெடுகலும் வழங்கப்பட்டது, இருக்கு வேத பாடல்கள், இவ் வேதத்தில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களின் எண் 1028. இவை பல நூற்றாண்டுகளிற் பாடப்பட்டன. வேதகால வரலாற்றை அறிவதற்கு இப்பாடல்களே ஆதாரமாக வுள்ளன.
     நான்கு எனப்படும் வேதங்களும் வளர்ந்த முறை வருமாறு; பழைய வழக்கப்படி சில பாடல்கள் பலிகளிற் பாடப்பட்டன. ஆகவே, இப்பாடல்கள் வேதத்தினின்றும் பிரித்தெடுத்து ஒரு தொகுதியாக்கப்பட்டுச் சாமவேத மெனப்பட்டன. விசேடமான யாகம் செய்வதற்குரிய பிரமாணங்களும் அவைகளிற் பாடப்படும் பிரமாணங்களும் பிரித்தெடுத்துத் தொகுக்கப்பட்டு யசுர்வேத மெனப்பட்டன. பிற்காலப் பாடல்களும் பில்லி சூனியம் முதலிய கூறும் பகுதிகளின் திரட்டும் அதர்வணவேத மெனப்பட்டது. -இந்திய நாகரிகம் - உரோமஸ் சந்திரதத்தர்.
     அமர சிம்ஹமும் மூன்றெனக் கூறுகின்றது,1
ஆரிய வேதங்களும் அங்கங்களும் பிறவும் மக்களாற்

     1. The Hymns of Rig. Veda:- The hymns which are collected in this work are 1028 in number and were composed during several centuries. They are only the materials we have for the history of this early period, which is called the Vedic Age.
     "The people of India recognised four Vedas, and this is how they have grown up, some of the hymns by an ancient custom changed at sacrifices instead of being recited and