செய்யப்பட்டன வென்பது சிவத்தியாநாநந்த மகரிஷி என்னும் அறிஞரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வேத பாடல்களைக் கொண்டும் இனிதறியலாகும். ஆரிய மறைகள் கொலை வேள்வியை வற்புறுத்திக் கூறும். வேத மார்க்கத்தைக் கைக்கொண்டு உஞற்றப்பட்ட கொலை வேள்விகளைக் கண்டிப்பதற்கெழுந்ததே புத்தமதம். "தக்கன் வேள்வித் தகர்தின்று நஞ்சமஞ்சி" (திருவாசகம்) என்பதால் யாகங்களிற் கொல்லப்படும் மிருகங்களின் ஊனை வேள்வி யாசிரியரும் பிறரும் பாதீடு செய்வது வழக்காறெனத் தெரிகின்றது. நீதி நூல்களும் சைவ நூல்களும் கொலை பாவமென விள்ளுகின்றன. ஆரியமதம் தென்னாட்டில் வேரூன்றிய பிற்காலத்தில் சிறந்த அறிவாளிகளும் சிரார்த்தம் மகம் முதலியவற்றிற் செய்யப்படும் கொலை பாவமாகாதென நம்பத் தலைப்பட்டனர். இந்நம்பிக்கைக்குக் காரணம் கொலை வேள்விகளை வகுத்துள்ள வேதங்கள் கடவுள்வாய்ப் பிறந்தன என அன்னோர் விசுவாசித்தமையேயாம். |
"சமிதையெறும் பீக்குப் பிராயச்சித் தத்தை யவையடைவே செய்யென் றறைந்தாய்-இமையோர் சிசுக் கவரு நஞ்சுண்ட யாகத்திற் பசுக்கொலையேன் சொன்னாய் பகர்" | (சிற்றம்பல நாடிகள்) | |
"பூசுரர்க் கிழிவிலை யாகத்துயிர்கொன் றருந்தலின் விண்புகுதா நிற்பர் கோச மெடுத்துரை நவிற்றாசிரியர் சிறார்க்கி தமதுமுன் கொடுப்பான் முன்னர் | |
|
a separate collection was made of these chanted hymns and called Sama Veda. Special sacrifical formulas and rules also existed from ancient times for the performance of rites and these formulas and rules were collected under the form of Yajur Veda and a collection of the latter hymns often consisting of charms and incantations against evil influences grew up under the name of Atharva Veda."-The civilizaton of India by Romesh C.Dutt, C.I.E. |