ஆசுமிகு துயர்விளைத்தும் இதம் அதுவாப் பொருள்பெறலின் அரிய வேத ஓசைமிகு மமருலகை அவர்வதைத்த சீவனும்பெற் றுய்த லாலே" | (கொலைமறுத்தல்) | |
"குழைமுகந் தூங்குஞ் செம்மணிப் பசும்பொற் குண்டல வேதியர் நாளும் அழன்முகத் தாற்றும் அருமகத் தன்றிச் செந்தசை அருந்தின ரில்லை | (காசி காண்டம்) | |
"அருமகத் தன்றியூன் சுவைத்துடல் வீக்குவோன்" (மேற்படி) |
"மருந்தில் திதியின் உயிருய்யும் வாயின் மகமதனில் அருந்தற் கியல்பதத் தெனினும்" | (அருட்பிரகாசம்) | |
மேற்காட்டியன முன் யாம் கூறியவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாகும். |
அப்பைய தீட்சிதர் தாம் வேள்வி ஆசிரியனா யிருந்து இயற்றிய மகத்தில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த மிருகங்களைப் பார்த்து, "ஓ வேதமே! உன்னை நம்பினேன்" எனக் கதறி ஓலமிட்டனராம்.1 |
5. உபநிடதம் |
உபநிடதங்கள் என்னும் நூல்கள் கி.மு. 1000க்கும் கி.மு. 300க்கு மிடையில் எழுந்தன. அக்காலத்தில் ஆரியப் பிராமணர்கள் உண்மை ஞானந் தேடிப் பலவிடங்களுக்கும் அலைந்து திரிந்தார்கள். இவ்வாறு திரிந்தவர்களுள் |
|
1. The great Appaya Dikshithar horrified at the sight of the slaughtered animals at a vedic sacrifice he performed is said to have cried out, "Oh Ye Vedas! I believe you." (Tamiliyan Antiquary No.2) |
"But there is evidence of its (bulls) having been killed in sacrifices and its cooked flesh offered to the Gods, specially to Indra who seemed to have developed a keen taste and inordinate desire for it." (Rig Vedic, India.) |