பக்கம் எண் :

168தமிழகம்

யாக்ஞவல்கி என்பவரும் ஒருவர். இவருடன்கூடிச் சென்றோர் சுவேதகேது, ஆருணேயர், சோமசுமசத்தியஞ்ஞர் என்போர். இவர்கள் திரும்பும் மார்க்கத்தில் கல்வியிற் சிறந்த சனகன் என்னும் விதேகநாட்டு அரசனை எதிர்ப்பட்டார்கள். சனகன் அப் பிராமணர்களை நோக்கி நீவிர் அக்கினி கோத்திரத்தை எவ்வாறு செய்கிறீர் என்று வினவினான். அதற்கு யாக்ஞவல்கி சிறிது பொருத்தமாகவும் ஏனையோர் சிறிதும் பொருந்தாமலும் விடை கூறினார்கள். அதனைக்கேட்ட சனகன் இவ்வளவுதானே என்று எள்ளித் தேர்மீதேறிச் சென்றான். யாக்ஞவல்கியை ஒழிந்த மூவரும் இராசன்னிய (அரசு) வகுப்பைச்சேர்ந்த இவன் நம்மை இகழ்ந்தான் என நி்ன்றுவிட்டார்கள். யாக்ஞவல்கி மாத்திரம் பின்தொடர்ந்து தேரோடு சென்று அதன் உண்மைப் பொருளைச் செவிமடுத்துத் தெளிந்தார். இது சதபதப் பிரமாணம் பதினோராவது புத்தகத்திற் கூறப்படுகின்றது.
     1அக்காலத்தில் உபநிடத ஞானங்கள் அரசருக்கு மாத்திரம் தெரிந்தனவும் பிராமணர்கள் அறியாதனவுமாயிருந்தன. உபநிடதங்களிற் கூறப்படும் மறுபிறப்புக் கொள்கை வேதங்களும் பிராமணரும் அறியாதது. ஆரியருடைய நீதி நூல்கள் பிராமணன் மாத்திரம் குருவாயிருந்து

     1. In the Upanishad however we find not only kings but also women and even people of dubious descent taking active part in the literary and philosophical aspirations and often possessors of the highest knowledge..........In the law books it is again and again emphasised that only the Brahman may teach the Vedah and only a member of the three higher classes may be instructed in the Veda. In the Upanishads we are repeatedly told that kings or warriors are in possession of the highest knowledge and the Brahman go to them for instruction.........the king impart the doctrine to him and it is the doctrine of transmigration which here, for the first time it appears clearly and distinctly proves to be a doctrine which enacted from warrior class and was originally foreign to the Brahman Theology-Histry of Indian Literature, P. 220-M. Winternitz, Ph.D.