பக்கம் எண் :

174தமிழகம்

"புகைவிரித் தன்ன பொங்குதுகி லுடீஇ" (புறம்

     தமிழகத்தில் ஆடை நெய்யப்பட்டுப் பிறநாடுகளுக்கனுப்பப்பட்டது. முற்காலத்து வீடுகளி லிருந்துகொண்டே அருமையான ஆடைவகைக நெய்தற்குரிய நுண்ணிய நூலிழைகள் முழுவதும் வீட்டுப் பெண்களால் நூற்கப்பட்டன. இதற்குச் சான்று, "பருத்திப் பெண்டின் பனுவலன்ன" (உரை. பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோல) என்னும் புறப்பட்டாகும்.
"பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவோனே சேயிழையா-எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நுண்முடியு மாறு."

(நன்னூல்)

     மரம், இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலியவற்றில் நுட்பம் வாய்ந்த தொழில் புரியும் கம்மியரும் பிற தொழிலாளரும் அக்காலத்து இருந்தார்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களா லறியப்படும்.

8. ஓவியம்

     தமிழ்மக்கள் ஓவியப் பெற்றியை விரித்துக் கூற வேண்டியதில்லை. பழைய சோழர் கட்டிடங்களும், பழைய கோயில்களும், அமராவதி, மாவலிபுரம் முதலிய விடங்களிலுள்ள சிற்ப நுட்பங்களும், பழந்தமிழ் மக்கள் அணிகலன்களும் அவர்கள் பாட்டுக்களும் தமிழோவியத்தின் உயர்விற்கு நிலைக்களங்களா யிருக்கின்றன. தாகூர் முதலிய கவிவாணரும் தமிழர்; ஓவியத்தைப் போற்றியிருத்தல் கவனிக்கத்தக்கது, `நெடுநிலை மாடத் திடைநிலத் திருந்துழிழு என்றும். `வேயா மாடமும்ழு என்றும், `மான்கட் காதலர் மாளிகை யிடங்களும்ழு என்றும் இளங்கோவடிகள் தமிழ்நாட்டுக் கட்டிடங்களைச் சிறப்பித்திருத்தல் காண்க.
"சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறு
மையறு படிவத்து வானவர் முனிவர்