பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்175

எவ்வகை யுயிர்களும் உவமங் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய
கண்கவ ரோவியங் கண்டுநிற் குநரும்"

(மணிமேகலை)

     மனிதர், மிருகங்கள், கடவுளர் முதலியோர் வடிவங்கள் பலவகை நிற மைகளினால் வீடுகள், அரண்மனைகள், கோயில்கள் முதலியவற்றின் சுவர்களில் தீட்டப்பட்டிருந்தன.
"இந்திரன் பூசை யிவளக லிகையிவள்
சென்ற கதவுமன் சினனுறக் கல்லுரு
வொன்றிய படியிதென் றுரைசெய் வோரும்
இன்னம் பலபல வெழுத்துநிலை மண்டபம்" 

(பரிபாடல்)

9. சிற்பம்

"கல்லு முலோகமும் செங்கலு மரமும்
மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமும்
கண்டசர்க் கரையு மெழுகு மென்றிவை
பத்தே சிற்பத் தொழிற்குறுப் பாவன"
     என்னும் திவாகரச் சூத்திரமே தமிழர் சிற்பத் திறமைக்குச் சான்று.

10. வான ஆராய்ச்சி

     தமிழ் மக்கள் வான ஆராய்ச்சியில் வல்லுநராயிருந்தன ரென்பது,
"செஞ் ஞாயிற்றுச் செலவு மஞ்ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்று
மினைத்தென் போரு முளரே"
     என வரும் புறப்பாட்டால் அறியப்படும். நிகண்டு நூல்களில் நாள் கோள் ஓரை முதலியவற்றைக் குறிக்கக் கூறப்